அடுத்த 24 மணி நேரத்தில்.. 16 மாவட்டங்களில் பலத்த மழை.. வானிலை ஆய்வு மையம் குஷி தகவல்
இன்று தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது
சென்னை: இன்று தமிழகம் முழுக்க 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடந்த சில தினங்களாகவே தமிழகம் முழுக்க மழை பெய்து வருகிறது.. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இந்த மழை பொழிவானது மேலும் அதிகரிக்கக்கூடும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
அதன்படி, இன்றைய தினம் தமிழகம் முழுக்க 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மழை
இது குறித்து வெளியான அறிக்கையில், "சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், நாமக்கல், சேலம், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியின் காரைக்காலில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நல்ல மழை பெய்யும்.

மேகமூட்டம்
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்... அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்... நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

மாவட்டங்கள்
அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோரம் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தலைநகர் டெல்லியில் இந்த ஆண்டு பருவமழை காலத்தில் 57 ஆண்டுகள் இல்லாத அளவு மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

பருவமழை
நடப்பாண்டு பருவமழைக் காலத்தில் அதிகப்படியான மழைப்பொழிவை டில்லி சந்தித்துள்ளது. கடந்த 1964ம் ஆண்டு இதே பருவமழை காலத்தில் டில்லியில் 1,190.9 மி.மீ., மழைப்பொழிவைப் பெற்றிருந்தது. 1933ம் ஆண்டு பருவமழை காலத்தில் 1,420.3 மி.மீ., மழையும், 1964ம் ஆண்டு 1,190.9 மி.மீ., மழையும் இதுவரை பதிவான அதிகபட்ச மழை அளவாகும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
-
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
Vijay vs CBN: அக்கட மாநிலத்தை கொஞ்சம் பாருங்க விஜய் சார்.. ஒரேநேரத்தில் 9 விமான நிலையமாம்.. ஆனா தமிழ்நாட்டில்? -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி'












Click it and Unblock the Notifications