ஹெல்ப் பண்ண சிஸ்டம் இப்ப ஃபேட் ஆக போகுது.. சென்னையில் மழை தொடருமா? சென்னை ரெயின்ஸ் விளக்கம்
சென்னை: இலங்கை கடற்கரையில் இருந்த சுழற்சி விரைவில் மங்கிவிடும் என்றும் இதனால் கிழக்கு திசை காற்றில் இருக்கும் ஈரப்பதம் தற்காலிகமாக குறையும் என்றும் சென்னை ரெயின்ஸ் டிவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்த வண்ணம் உள்ளது.

தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, இன்று காலை 5:30 மணி அளவில் மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய மற்றும் தெற்கு வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளது.
இது அடுத்த 6 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதன்பிறகு, இது வடமேற்கு திசையில் நகர்ந்து, 16ஆம் தேதி ஆந்திர கடற்கரையில் மேற்கு மத்திய வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
அதை தொடர்ந்து, இது வடகிழக்கு திசையில் திரும்பி, நவம்பர் 17 ஆம் தேதி ஒடிசா கடற்கரையில் வடமேற்கு வங்க கடலை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆந்திரா மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா, ஆகிய இடங்களில் வரும் நவம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்டா மாவட்டங்களில் நேற்று முதலே கனமழை வெளுத்தெடுத்தது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் நேற்றைய தினம் மாலை காலை முதலே மழை பெய்த வண்ணம் இருந்தது. இது மாலை போக போக தீவிரமடைந்தது. நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது.
இதனால் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் மழையின் தீவிரம் எப்படி இருக்கும் என்பது குறித்து சென்னை ரெயின்ஸ் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் உள்பட தமிழக கடலோர பகுதிகளில் மழையின் அளவு குறையும்.
ஏனென்றால் இன்று வங்கக் கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறுகிறது. கடந்த 48 மணி நேரமாக இலங்கை கடற்கரையை சுற்றியிருந்த வளி மண்டல சுழற்சியால் மழை பெய்தது. தற்போது அந்த சுழற்சி விரைவில் மறையும். இனால் கிழக்கு திசையிலிருந்து வீசும் காற்றில் ஈரப்பதமும் குறையும். அதே வேளையில் அடுத்த சில நாட்களுக்கு கேரளா, தென் தமிழகத்தில் மிதமானது முதல் கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications