சென்னையில் 2வது நாளாக கன மழை.. குளு குளு வானிலை.. ஏரிகள் நீர்மட்டம் கிடுகிடு
Recommended Video

சென்னை: இரண்டாவது நாளாக சென்னையில் இன்றும் மழை வெளுத்து வாங்குகிறது. அண்டை மாவட்டங்களிலும் காற்றுடன் கன மழை கொட்டி வருகிறது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதையடுத்து வட தமிழகத்தில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், சென்னை உட்பட வட தமிழக மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
[சென்னை வெள்ளத்தில் களம் இறங்கிய நடிகர், நடிகையர்.. காவிரி டெல்டாவை மறந்தது ஏன்? ]

சென்னையில் எங்கெல்லாம் மழை
செவ்வாய்க்கிழமை மாலை முதல் சென்னையில் பரவலாக மழை பெய்துவருகிறது. இன்றும் காலை முதல் நல்ல மழை பெய்து வருகிறது. கொளத்தூர், அனகாபுத்தூர், கோயம்பேடு, மீனம்பாக்கம், சாலிகிராமம், ஆழ்வார்திருநகர், மடிப்பாக்கம், வேளச்சேரி, நுங்கம்பாக்கம், பெருங்களத்தூர், தாம்பரம், ஓஎம்ஆர் சாலை, ஆலந்தூர், தி.நகர், பொத்தேரி, மகேந்திரா சிட்டி, அசோக்நகர், கீழ்கட்டளை, மெரினா கடற்கரை, மேற்கு மாம்பலம், குரோம்பேட்டை, அடையாறு உள்ளிட்ட இடங்களில் மக்கள் மனம் குளிரும் அளவுக்கு மழை கொட்டியது.

காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்கிறது. மாமல்லபுரம், கல்பாக்கம், திருக்கழுங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் நேற்று முதல் கன மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் விட்டு விட்டு பெய்கிறது. இதனால் குளுகுளு வானிலை நிலவுகிறது.

திருவள்ளூர்
சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்திலும் மழை கொட்டுகிறது. பொன்னேரி, கும்மிடிபூண்டி, செங்குன்றம், பழவேற்காடு, சோழவரம் உள்ளிட்ட இடங்களில் விட்டுவிட்டு காற்றுடன் மழை பெய்து வருகிறது.

ஏரிகள் நீர்மட்டம்
தொடர் மழை எதிரொலியாக, சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த 2015ம் ஆண்டை போல ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.


Click it and Unblock the Notifications
