சென்னையில் மழை நிற்காது.. அடுத்த 2 மணி நேரம்.. 17 மாவட்டங்களுக்கு அலர்ட்.. வானிலை மையம் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் இன்றும் பல்வேறு இடங்களில் மழை கொட்டி வருகிறது. தலைநகர் சென்னையிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த சூழலில், இன்று மாலை 4 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழைக்கும், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், கோவை, நீலகிரி, தேனி, தென்காசியில் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை கொட்டி வருகிறது. முதலில் தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் கடந்த 4 நாட்களாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், நாகையில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

17 மாவட்டங்களில் மழைக்கு சான்ஸ்
நேற்றும் தொடர்ந்து தலைநகர் சென்னையில் மழை கொட்டியது. இரவும் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் இன்றும் தொடர்ந்தது. தொடர்ந்து சென்னையில் மழை விட்டு விட்டு கொட்டி வருவதால் பல்வேறு இடங்களில் தேங்கிய மழை நீர் வடியாமல் இருந்து வருகிறது. இந்த சூழலில் அடுத்த 2 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தேனி, தென்காசி, கோவைக்கும் அலர்ட்
வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் இன்று மாலை 4 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோல் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கோவை, நீலகிரி, ராமநாதபுரம், தேனி, தென்காசி ஆகிய 14 மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.
இதனால் ஒரு சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்க வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications