உதவியாளருக்கு கொரோனா உறுதி - தனிமைப்படுத்திக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உதவியாளர் தாமஸூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உதவியாளர் தாமஸூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஆளுநர் மாளிகையில் உள்ள பாதுகாப்பு வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்பட 84 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் நால்வருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. உதவியாளருக்கு கொரோனா உறுதியானதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் ஆளுநர் மாளிகை கிண்டி சர்தார் படேல் சாலையில் உள்ளது. பல 100ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அந்த மாளிகையில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்நிலையில் ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 147 பேருக்கு கொரோனா தொற்றுப் பரிசோதனை அண்மையில் நடத்தப்பட்டது. இதில் 84 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Raj Bhavan employees PRO tested positive for COVID-19

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது சுகாதாரத் துறையால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும். ராஜ் பவன் கட்டிடத்திற்கு வெளியே பணிபுரிந்து வந்தனர். இந்த நபர்கள் யாரும் ஆளுநர் அல்லது ராஜ் பவனின் மூத்த அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளவில்லை என்று கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் நேரடி தொடர்பில் இருந்த உதவியாளர் தாமஸூக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் மக்கள் தொடர்பு அதிகாரிகள் 2 பேர் உள்பட மொத்தம் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஆளுநர் மாளிகையில் 84 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில் 88 பேர் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆளுநர் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் நேரடி தொடர்பில் இருந்த உதவியாளர் தாமஸூக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் மக்கள் தொடர்பு அதிகாரிகள் 2 பேர் உள்பட மொத்தம் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஆளுநர் மாளிகையில் 84 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில் 88 பேர் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆளுநர் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவர் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிஉச்சபட்சம்-ஆந்திராவில் ஒரே நாளில் 7,948 பேருக்கு கொரோனா- இந்தியாவில் 15 லட்சத்தை கடந்தது பாதிப்பு

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+