மக்கள் மாளிகை என பெயர் மாற்றினால் போதுமா? சிந்தனையில் மாற்றம் தேவை! ஸ்டாலின் கடும் அட்டாக்
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநரின் மாளிகையான ‛ராஜ்பவன்' பெயர் "மக்கள் பவன்" என மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சிந்தனையிலும், செயலிலும் மாற்றமில்லை எனில் பெயர் மாற்றம் தேவையற்றது என்றும், மக்களாட்சி தத்துவத்தின் கண்களில் மண்ணை தூவுவதற்காக இது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நம் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள கவர்னர் மாளிகைகள் 'ராஜ் பவன்' என அழைக்கப்படுகின்றன. யூனியன் பிரதேசங்களில் உள்ள துணை நிலை ஆளுனர்களின் மாளிகை 'ராஜ் நிவாஸ்' என அழைக்கப்படுகிறது.

தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, ராஜ் பவன் என்பதை மக்கள் பவன் என மாற்ற வேண்டும் என நீண்ட நாட்களாகவே கூறி வந்தார். அந்த வகையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜனாதிபதி மாளிகையில் நடந்த கவர்னர்கள் மாநாட்டின் போது இதனை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கோரிக்கையாக வைத்தார்.
இந்த பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்ட நிலையில், நாடு முழுவதும் உள்ள ராஜ் பவன்கள் இனி 'லோக் பவன்' என்றும், ராஜ் நிவாஸ்கள் 'லோக் நிவாஸ்' என்றும் ஒரே மாதிரியாக பெயர் மாற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து ஒவ்வொரு மாநிலங்களிலும் ராஜ் பவன் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவன் தமிழில் மக்கள் பவன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநரின் மாளிகையான ‛ராஜ்பவன்' பெயர் "மக்கள் பவன்" என மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், சிந்தனையிலும், செயலிலும் மாற்றமில்லை எனில் பெயர் மாற்றம் தேவையற்றது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
பெயர் மாற்றத்தைவிடச் சிந்தனை மாற்றமே தேவை!
சட்டமன்றம் = மக்கள் மன்றம்! சட்டமன்றத்தை மதிக்காதவர்கள், "மக்கள் மாளிகை" எனப் பெயர் மாற்றுவது கண் துடைப்பா? மக்களாட்சித் தத்துவத்தின் கண்களில் மண்ணைத் தூவுவதற்கா?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளையும், மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற இறையாண்மையுள்ள சட்டமன்றத்தையும் மதிப்பதுதான் இப்போதைய தேவை!
சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் இல்லையெனில், இதுவும் தேவையற்றதே! இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications