பத்தில் குரு.. பதவி பறிபோகும்... ராஜ கண்ணப்பன் விஷயத்தில் இப்படித்தானோ!
ரிஷப ராசியில் பிறந்துள்ள ராஜ கண்ணப்பனுக்கு பத்தாம் இடத்தில் உள்ள குரு பதவியில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.
சென்னை: ராஜ கண்ணப்பனின் அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என்று அனைவரும் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை கொண்ட கண்ணப்பன் விஷயத்தில் குரு பகவானின் சஞ்சாரம் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். ரிஷப ராசியில் பிறந்துள்ள ராஜ கண்ணப்பனுக்கு பத்தாம் இடத்தில் குரு பதவியை பறிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டு அரசியலுக்கு எஸ்.கண்ணப்பனாக அறிமுகமானவர். எம்ஜிஆர் காலத்திலேயே அரசியலுக்கு வந்துவிட்டவர் எஸ்.கண்ணப்பன். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர். மாணவப்பருவம் முதலே எம்ஜிஆர் மீதும் பிறகு அதிமுக மீதும் ஈர்ப்பு கொண்டவர். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவின் விசுவாசியாக மாறினார்.
1991-1996ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் முதலாவது அமைச்சரவையில் பொதுப்பணி, நெடுஞ்சாலை, மின்சாரம் ஆகிய மூன்று முக்கியத் துறைகளுக்கு அமைச்சராக இருந்தவர் கண்ணப்பன். அடிக்கடி அமைச்சரவை மாற்றத்தைச் செய்த ஜெயலலிதா, ஒருமுறைகூட எஸ்.கண்ணப்பனை அமைச்சரவையிலிருந்து நீக்கவும் இல்லை. துறைகளைப் பறிக்கவும் இல்லை, மாற்றவும் இல்லை. வளம் கொழிக்கும் துறைகளை எல்லாம் கண்ணப்பனுக்கு வாரி வழங்கியிருக்கிறார் ஜெயலலிதா

அரசியல் வாழ்க்கையில் சரிவு
ஜெயலலிதா எதிர்ப்பு அலையால் 1996 தேர்தலில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் இராம.சிவராமனிடம் தோற்றுப் போனார். கண்ணப்பன் மீது திமுக ஆட்சியில் சொத்துக்குவிப்பு வழக்குத் தொடரப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக 11 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளைச் சேர்த்துள்ளார் என்றும், ஏராளமான கட்டடங்கள், நிலங்கள், வாகனங்களைத் தனது பெயரிலும் தன்னுடைய தாயார், மனைவி உள்ளிட்ட உறவினர் பெயர்களிலும் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. அது தொடர்பான நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கினார் கண்ணப்பன்.

தனிக்கட்சி கண்ட ராஜ கண்ணப்பன்
பல காரணங்களால் அதிமுகவிலிருந்து வெளியேறி மக்கள் தமிழ் தேசம் என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார் கண்ணப்பன். 2001ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்த கண்ணப்பனுக்கு இளையான்குடி தொகுதியை ஒதுக்கினார் திமுக தலைவர் கருணாநிதி. அதனால் அதிருப்தியடைந்த முன்னாள் சபாநாயகர் தமிழ்க்குடிமகன் திமுகவிலிருந்து வெளியேறினார். ஆனால் அந்தத் தேர்தலில் கண்ணப்பன் தோல்வியடைந்தார்.

ஜாதிய செல்வாக்கு அதிகம்
பிறகு விசிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து மக்கள் கூட்டணியை உருவாக்கிய கண்ணப்பன், 2004 தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றுப்போனார். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்ற போதும் கண்ணப்பனுக்கு தென்மாவட்டங்களில் கணிசமான செல்வாக்கு இருந்தது. ஜாதிய செல்வாக்கும் கண்ணப்பனுக்கு உள்ளது.

அமைச்சர் கனவு நனவாகவில்லை
மீண்டும் திமுகவில் இணைந்த கண்ணப்பன், 2006 சட்டசபைத் தேர்தலில் இளையான்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அப்போது தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால், அவரது யாதவ சமூகத்தைச் சேர்ந்தவரும் சிவகங்கை மாவட்டத் திமுக செயலாளருமான கே.ஆர்.பெரியகருப்பனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதால் கண்ணப்பனின் கனவு பலிக்காமல் போனது.

ப.சிதம்பரத்திற்கு எதிராக போட்டி
அதிமுகவில் மீண்டும் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். இதனையடுத்து 2009 லோக்சபா தேர்தலில் சிவகங்கைத் தொகுதியில் ப.சிதம்பரத்தை எதிர்த்து நிறுத்தினார் ஜெயலலிதா. அந்தத் தேர்தலில் சிதம்பரத்துக்குக் கடும் போட்டியாளராகக் களத்தில் நின்றார் கண்ணப்பன். அதனால், ஒரு காலத்தில் மூன்றரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்ற சிதம்பரம், அந்தத் தேர்தலில் மூவாயிரத்து சொச்சம் வாக்கு வித்தியாசத்தில் தட்டுத் தடுமாறி வெற்றி பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

மாறி மாறி பயணம்
நாடாளுமன்றத் தேர்தலில் தோற்ற கண்ணப்பனை 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் திருப்பத்தூர் தொகுதியில் அப்போதைய அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனை எதிர்த்து நிறுத்தினார் ஜெயலலிதா. அந்தத் தேர்தலில் அதிமுக ஆளும்கட்சியாக வந்தாலும் கண்ணப்பனால் ஜெயிக்க முடியவில்லை. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு நடந்த 2019 லோக்சபா தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உருவானபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவிலிருந்து வெளியேறிய ராஜ.கண்ணப்பன், திமுகவை ஆதரிப்பதாக அறிவித்தார்.

திமுக அமைச்சரவையில் பசையான பதவி
2021 சட்டமன்றத் தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற ராஜகண்ணப்பனை போக்குவரத்துத்துறை அமைச்சராக்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். போக்குவரத்துத்துறை என்ற முக்கியத்துவம் வாய்ந்த துறைக்கு அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கினார். சில தினங்களுக்கு முன்பு முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையரை சாதியைச் சொல்லி அவமதித்ததாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையாக மாறியது. இதனையடுத்து அமைச்சர் ராஜ.கண்ணப்பனிடம் இருந்த போக்குவரத்துத் துறை பறிக்கப்பட்டு, அவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

பதவி மாற்றப்பட்டதன் பின்னணி
இது ஒருபுறம் இருக்க, போக்குவரத்துறையினரின் வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்களும் மாணவர்களும் சந்தித்த பிரச்சினையும் முதல்வரின் கோபத்தை அதிகப்படுத்தியுள்ளதாம். திங்கட்கிழமையன்று அகில இந்திய அளவில் நடைபெற்ற வேலை நிறுத்தத்தப் போராட்டத்திற்கு முதல்நாளில் தொமுசவை அழைத்து பேசாதது, பேருந்துகளை சரிவர இயக்க நடவடிக்கை எடுக்காதது என்ற காரணத்திற்காகவே அவரை போக்குவரத்துறைக்கு பதிலாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு அமைச்சராக நியமித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பதவி பறிக்கப்படுமா?
இதனிடையே ராஜ கண்ணப்பனின் பதவியை பறிக்க வேண்டும் என்று பல அரசியல் கட்சித்தலைவர்களும் மாறி மாறி அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். ராஜ கண்ணப்பன் 1948ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி பிறந்துள்ளார். அன்றைய தினம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் உள்ளது. கோச்சாரப்படி தற்போது ரிஷப ராசிக்கு பத்தாம் வீட்டில் குரு பயணம் செய்கிறது. 'பத்தில் குரு பதவியை பறிப்பார்' என்பது சொல் வழக்கு உள்ளது. ராஜ கண்ணப்பனின் பதவியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எஸ். கண்ணப்பன் தனது பெயரை எண் கணிதப்படி ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன் என மாற்றிக்கொண்டே அரசியல் சரிவில் இருந்து மீண்டார். 25 ஆண்டு காலமாக இரண்டு கட்சிகளிலும் மாறி மாறி பயணித்து அமைச்சராக அமர்ந்துள்ள ராஜ கண்ணப்பன் எதிர்ப்பு அலையில் இருந்து தப்புவாரா? அல்லது ஜோதிட விதிப்படி அவரது பதவி பறிபோகுமா பார்க்கலாம்.
-
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்!












Click it and Unblock the Notifications