Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இங்க பாருங்க! திராவிட ஸ்டாக்ஸுக்கு சிறந்த பதிலடி!தமிழிசையின் வீடியோ பகிர்ந்து சாடிய காயத்ரி ரகுராம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜராஜ சோழன் இந்துவா? என்பது பற்றிய விவாதம் எழுந்துள்ள நிலையில் ‛‛திராவிட ஸ்டாக்ஸுக்கு இதுவே சிறந்த பதில்'' என பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவரான காயத்ரி ரகுராம் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் ராஜராஜ சோழன் இந்து இல்லை எனக்கூறிய கமல்ஹாசனின் கருத்து குறித்த கேள்விக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்தார்.

அதில் அவர் ‛‛பெயரின் அடிப்படையில் பார்த்தால் தமிழக முதல் அமைச்சரே தமிழ்நாட்டை சேர்ந்தவர் இல்லை என சொல்ல வேண்டும்'' எனக்கூறி சிரிக்கிறார். இந்த வீடியோ மூலம் திமுகவினரை காயத்ரி ரகுராம் சாடியுள்ளார்.

பொன்னியின் செல்வன் விவாதம்

பொன்னியின் செல்வன் விவாதம்

இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வெளியாகி திரைப்படங்களில் ஓடி வருகிறது. இந்நிலையில் தான் திரைப்படம் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் றெக்கை கட்டி பறக்க தொடங்கி உள்ளன. குறிப்பாக ராஜ ராஜ சோழன் யார்? என்பது பற்றிய கேள்விகளுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலை கூறி வருகின்றனர்.

வெற்றி மாறன் சர்ச்சை கருத்து

வெற்றி மாறன் சர்ச்சை கருத்து

இதற்கிடையே தான் சமீபத்தில் பேசிய இயக்குனர் வெற்றி மாறன், ராஜ ராஜ சோழனை இந்துவாக அடையாளப்படுத்துகிறார்கள் என குற்றம்சாட்டி இருந்தார். அவருக்கு ஒருதரப்பினர் ஆதரவு தெரிவித்த நிலையில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. வெற்றி மாறனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வரும் நிலையில் ராஜராஜ சோழன் இந்துவா? இல்லையா? என்பது பற்றியும் பலர் கருத்துகள் பகிர்ந்து வருகின்றனர்.

கமல்ஹாசன் அளித்த பதில்

கமல்ஹாசன் அளித்த பதில்

இதற்கிடையே தான் வெற்றி மாறன் கூறியது பற்றி நடிகரும், அரசியல் வாதியுமான கமல்ஹாசனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கமல்ஹாசன், ‛‛ராஜ ராஜ சோழன் காலத்தில் இந்து மதமே இல்லை'' என தெரிவித்தார். இதனால் கமல்ஹாசனும் பொன்னியின் செல்வம் படம் தொடர்பான விவாதத்தில் சிக்கி பாஜக, இந்து அமைப்புகளின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளார்.

தமிழிசை சவுந்தரராஜன் கருத்து

தமிழிசை சவுந்தரராஜன் கருத்து

இந்நிலையில் தான் கமல்ஹாசன் கூறியது பற்றி தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு தமிழிசை சவுந்தரராஜன், ‛‛கமல்ஹாசனுக்கு மதத்தில் நம்பிக்கை இல்லை. அப்படி என்றால் மதத்தை பற்றி ஏன் பேசுகிறார்?. இப்போது உள்ள பெயர் இல்லை. அப்போது இல்லை பெயர் இல்லை என்றால் தமிழக முதல் அமைச்சரே தமிழ்நாட்டை சேர்ந்தவர் இல்லை என்று தான் சொல்ல முடியும். பெயரை வைத்து தான் சொல்ல வேண்டும் என்றால் என்ன அர்த்தம். அப்படி பார்த்தால் பெயரில் தமிழ் வைத்துள்ள நான் மட்டும் தான் தமிழ்நாட்டுக்காரர் என சொல்ல முடியும்'' எனக்கூறி சிரிக்கிறார்.

ட்விட்டரில் பகிர்ந்த காயத்ரி ரகுராம்

ட்விட்டரில் பகிர்ந்த காயத்ரி ரகுராம்

இந்த வீடியோவை தான் தற்போது பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவரான காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ‛‛திராவிட ஸ்டாக்ஸுக்கு இதுவே சிறந்த பதில்'' என அவர் கூறியுள்ளார். இதன்மூலம் ராஜ ராஜ சோழன் இந்து மதத்தை சேர்ந்தவர் இல்லை என வெற்றி மாறன், கமல்ஹாசன் கூறியதை ஆதரித்த திமுகவினரை அவர் சாடியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+