திருமாவா இப்படி? விசிக மாநாட்டில் முளைத்த ராஜாஜி கட் அவுட்.. பெரும் சர்ச்சை.. திருமாவளவன் விளக்கம்
சென்னை: நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நடத்தப்பட்ட மது ஒழிப்பு மாநாட்டில் முன்னாள் முதல்வர் ராஜாஜியின் கட் அவுட் வைக்கப்பட்ட விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திருமா நடத்தும் ஒரு மாநாட்டிலா இப்படி கட் அவுட் வைக்கப்பட்டு உள்ளது என்ற கேள்வியை இது எழுப்பி உள்ளது.
முன்னாள் முதல்வர் ராஜாஜி குலக்கல்வியை ஆதரித்தவர். பல பள்ளிகளை மூடியவர். அதோடு இல்லாமல் மனு ஸ்மிருதியை ஆதரித்தவர். முன்னாள் முதல்வர் ராஜாஜி செய்தது சரி.. தவறு என்பதெல்லாம் அவரவர் கொள்கைக்கு ஏற்றபடி மாறும். ஆனால் திருமாவின் கொள்கைக்கு முழுக்க முழுக்க எதிரான கொள்கை கொண்டனர் முன்னாள் முதல்வர் ராஜாஜி.

விசிக மனு ஸ்மிரிதி எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு, குலக்கல்வி எதிர்ப்பு ஆகியவற்றை தீவிரமாக கடைபிடிக்கும் கட்சி. முன்னாள் முதல்வர் ராஜாஜியின் கொள்கைகள் அதற்கு எதிரானது. இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நடத்தப்பட்ட மது ஒழிப்பு மாநாட்டில் முன்னாள் முதல்வர் ராஜாஜியின் கட் அவுட் வைக்கப்பட்ட விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
மது ஒழிப்பு மாநாடு: நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் நாடு முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்பன உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த தீர்மானங்களை மேடையில் திருமாவளவன் வாசித்து அதன்பிறகு பேசினார். அப்போது திருமாவளவன் கூறியதாவது: இளம்வயதில் ஒருவருக்கு மது மற்றும் போதைப் பழக்கம் வந்தால் மனித வளம் அழியும். இதை உணர்த்தவும், மதுவிலக்கை அமல்படுத்தவே நம் மாநாடு நடத்தப்படுகிறது. ஆனால் நம் மது ஒழிப்பு மாநாட்டின் உயர்ந்த நோக்கத்தை சிலர் சிதைத்துவிட்டார்கள். அனைத்துக் கட்சிகளுக்கும் விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அரசியல் சாயம் பூசிவிட்டார்கள் என்று கடுமையாக பேசினார்.
சர்ச்சை: இதில்தான்.. மது ஒழிப்பு மாநாட்டில் முன்னாள் முதல்வர் ராஜாஜியின் கட் அவுட் வைக்கப்பட்ட விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு திருமா அளித்துள்ள விளக்கத்தில்.. இதுவரை நாம் பயன்படுத்தாத காந்தி, ராஜாஜி படங்களை இந்த மாநாட்டில் பயன்படுத்தி உள்ளோம்; இது அரசியலுக்காக அல்ல; மதுவை வேண்டாம் என கூறிய அத்தனை பேரின் வாழ்த்தும் நமக்கு தேவை என்பதற்காக... என்று கூறியுள்ளார்.
விமர்சனம் : ஆனாலும் அவரின் கருத்துக்கள் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.. ராமதாஸ் கூடத்தான் மதுவை எதிர்க்கிறார்.. அன்புமணி எதிர்க்கிறார்.. இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் தீவிரமாக மதுவை எதிர்க்கும் பலரில் அவர்கள் இருவரும் அடக்கம். அப்படி இருக்க அவர்களின் கட் அவுட்டை வைப்பார்களா ? என்றெல்லாம் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. திமுகவின் கொள்கைக்கு எதிரானவர் ராஜாஜி.
விசிகவின் அடிப்படை கொள்கைக்கு எதிரானவர் ராஜாஜி. அப்படி இருக்க மதுவை எதிர்த்த ஒரே காரணத்திற்காக அவர் புகைப்படத்தை வைக்கிறார்கள் என்றால்.. குஜராத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்திய அப்போதைய முதல்வர் மோடி புகைப்படத்தை திருமா வைப்பாரா என்றும் நெட்டிசன்கள்.. விமர்சனங்களை வைக்க தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications