100 பெண்களை நாசம் செய்த 65 வயது ராஜஸ்தான் டாக்டர்? புகார் சொன்ன இந்த கமலா நர்ஸ் யார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு டாக்டர் பாலியல் புகாரில் சிக்கி உள்ளார்.. 65 வயது சீனியர் டாக்டரை மிரட்டி 2 கோடி ரூபாய் பறித்த வழக்கில் கைதான நர்ஸ் சொன்ன அந்த செய்தியை கேட்டு போலீசாரே அதிர்ந்து விட்டனர்.. அந்த டாக்டர் 100-க்கும் மேற்பட்ட பெண்களைச் சீரழித்துள்ளார்.. தொடர் கற்பழிப்பு குற்றவாளி என்றெல்லாம் பகீரை கிளப்பி உள்ளார்.. இந்த சம்பவம் ராஜஸ்தான முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பார்மர் நகரில் இயங்கி வரும் பிரபல தனியார் மருத்துவமனையில் சீனியர் டாக்டராக அவர் பணிபுரிந்து வருகிறார்.. 65 வயதாகிறது.. இந்த சீனியர் டாக்டரின் மருத்துவமனையில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் கமலா என்ற கமலேஷ் நர்ஸாகப் பணிபுரிந்து வந்தார்.

Rajasthan doctor extortion and sexual exploitation allegations case

ராஜஸ்தான் சீனியர் டாக்டர்

கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த இவர், நைட் டியூட்டியின் போது டீ போட்டு கொடுப்பதாக கூறி டாக்டரின் அறைக்கு சென்றிருக்கிறார்.. அப்போது டாக்டருக்குத் தெரியாமல் அவருடைய செல்போனில் இருந்த தனிப்பட்ட போட்டோக்களை தன்னுடைய செல்போனுக்கு மாற்றிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

அந்த அந்தரங்க போட்டோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிடுவதாகவும், பொய்யான பாலியல் வழக்கில் சிக்க வைப்பதாகவும் மிரட்டி, டாக்டரிடம் இருந்து சுமார் 2 கோடி ரூபாய் வரை அவர் பறித்துள்ளார்.

நர்ஸ் மிரட்டி 2 கோடி

இந்த மிரட்டல் விவகாரத்தில் ஆன்லைன் மூலமாக மட்டுமே டாக்டரின் வங்கி கணக்கில் இருந்து சுமார் 35 லட்சம் ரூபாய் வரை நர்ஸின் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாம்.. அதுமட்டுமல்லாமல், டாக்டரை மிரட்டி காலியான காசோலைகள் மற்றும் காலியான முத்திரைத் தாள்களில் கையெழுத்து வாங்கி, அவற்றை வங்கி லாக்கரிலும் பூட்டி வைத்துள்ளார்.

அத்துடன், மருத்துவமனையின் சிசிடிவி கேமராக்கள் மூலம் டாக்டரின் நடமாட்டத்தை எப்போதும் கண்காணித்து வந்த அந்த நர்ஸ், டாக்டருக்கு தனியாக ஒரு போன் மற்றும் சிம் கார்டு கொடுத்து அதை எப்போதும் ஆன் செய்து வைத்திருக்குமாறும் கட்டாயப்படுத்தியுள்ளார்.

கமலா நர்ஸ் பகீர்

தொடர்ந்து வந்த மிரட்டல்கள் மற்றும் பணப் பறிப்பால் மன உலைச்சலுக்கு ஆளான சீனியர் டாக்டர், பார்மர் நகர போலீஸில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில், டிஜிட்டல் ஆதாரங்களைச் சேகரித்த போலீசார், நர்ஸ் கமலா மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நர்ஸ் கமலாவை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக நேற்று அழைத்து சென்றனர்.. அப்போது நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி விட்டார் கமலா.

100 பெண்களை நாசம் செய்தவர்

அந்த வீடியோவில், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நர்ஸ் கமலா மறுத்துள்ளார்.. அந்த டாக்டர் ஒரு தொடர் கற்பழிப்பு குற்றவாளி.. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் பெண் நோயாளிகள் உட்பட இதுவரை 100-க்கும் மேற்பட்ட பெண்களை அவர் பாலியல் ரீதியாகச் சீரழித்துள்ளார்.

ஆசைவார்த்தை கூறி பெண்களை மயக்குவதில் அவர் கில்லாடி, அவருக்குப் பெண்களை அழைத்து வர மருத்துவமனையில் உள்ள 2 ஊழியர்கள் உதவி செய்து வருகிறார்கள். ஏற்கனவே சில பெண்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும், பெருமளவில் பணத்தை கொடுத்து டாக்டர் அந்த விவகாரங்களையெல்லாம் மூடிமறைத்து விட்டார்.. அவர் மீதான குற்றச்சாட்டுகளை அடக்குவதற்காகவே என் மீது பொய்யான வழக்கை ஜோடித்துள்ளார்" என்று கூறி பரபரப்பை தந்துவிட்டார்.

நர்ஸ் கமலா யார் தெரியுமா

இதுகுறித்து போலீஸ் தரப்பில் சொல்லும்போது, நர்ஸ் கமலா சொன்ன பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.. அவை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.. கைதான நர்ஸ் விசாரணைக்குச் சரிவர ஒத்துழைக்கவில்லை.. போலீசாரை தவறாக வழிநடத்த முயல்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நர்ஸ் கமலா வழக்கு பற்றின செய்திதான் இணையத்தில் பரபரப்பை கூட்டி வருகிறது.. கைதான நர்ஸ் கமலா யார் தெரியுமா? கடந்த 2020-ம் ஆண்டு பார்மர் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெறும் 58 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தவர் ஆவார்.. அரசியல் தொடர்புடைய கமலாவுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது.. ஆனால், தன் கணவர் மீதே வரதட்சணை வழக்கு தொடர்ந்தவராம்..

ஒருபுறம் மிரட்டி பணம் பறித்த வழக்கு, மறுபுறம் 100 பெண்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டு என 2 கோணங்களிலும் இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+