ரிசல்டுக்கு முன் பாஜக நிர்வாகி ட்வீட்.. அவருக்கே எதிரா திரும்பிருச்சே! காங்கிரஸுக்கு செம மோட்டிவேசன்
சென்னை: 4 மாநில தேர்தல் முடிவுகளுக்கு முன்பாக பாஜக மாநில நிர்வாகி வெளியிட்ட எக்ஸ் பதிவு தற்போது காங்கிரஸ் கட்சிக்கு பெரிய உந்துதலாக அமைந்து இருக்கிறது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கும், மிசோரம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சியை பிடித்தது. இதில் காங்கிரஸ் கட்சியில் இருந்த ஜோதிர் ஆதித்யா சிந்தியா மூலமாக பாஜகவின் ஆபரேசன் தாமரையால் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி 2 ஆண்டுகளில் கவிழ்ந்தது.

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் டி.ஆர்.எஸ் (பி.ஆர்.எஸ்) கட்சியும் மிசோரம் மாநிலத்தில் சொராம்தங்காவின் எம்.என்.எப் கட்சியும் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தனர். இந்த 5 மாநிலங்களில் ஆளும் கட்சிகளின் ஆட்சி காலம் இந்த ஆண்டுடன் நிறைவடைய உள்ள நிலையில், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டது.
மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7 ஆம் தேதி மற்றும் 17 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 23 ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30 ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறறது. மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 17 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
டிசம்பர் 3 ஆம் தேதி அனைத்து மாநிலங்களிலும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை வெளியான முடிவுகளின்படி, தெலுங்கானாவில் காங்கிரஸ் 65 இடங்களிலும், பிஆர்எஸ் 36 இடங்களிலும் வெற்றிபெற்றது. மத்திய பிரதேசத்தில் 131 இடங்களிலும், காங்கிரஸ் 46 இடங்களில் வெற்றிபெற்றன. ராஜஸ்தானில் 113 இடங்களிலும், காங்கிரஸ் 65 இடங்களிலும், சத்தீஸ்கரில் 54 இடங்களில் பாஜகவும், காங்கிரஸ் 35 இடங்களிலும் வெற்றிபெற்று உள்ளது.
இப்படி 3 மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடிப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு பாஜகவின் தொழிற்பிரிவு மாநில துணைத் தலைவர் செல்வகுமார் எக்ஸ் தளத்தில் தேர்தல் முடிவுக்கு முன் வெளியிட்ட பதிவு தற்போது காங்கிரஸுக்கு மோட்டிவேஷனாக அமைந்து உள்ளது. அதில், "2018ம் வருட சட்டமன்ற தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், சட்டீஷ்கர் என மூன்று மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை இழந்தது.

ஆறு மாதம் கழித்து நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற தொகுதிகள். ராஜஸ்தான் - 25/25; மத்திய பிரதேஷ் - 28/29; சட்டிஸ்கர் - 9/10 தெலுங்கானாவில் வெறும் 1 எம்எல்ஏ ஜெயித்த பாஜக, நாடாளுமன்ற தேர்தலில் 4 தொகுதிகளில் வென்றது." என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் 3 மாநில தேர்தலில் தோல்வி அடைந்து இருக்கும் காங்கிரஸுக்கு இவரது பதிவு உத்வேகம் அளிக்கக்கூடியதாக மாறி இருக்கிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications