கோட்சேவை பின்பற்றுபவர் என சபாநாயகர் விமர்சித்ததால் அவையிலிருந்து வெளியேறினேன்.. ஆளுநர் விளக்கம்
சென்னை: தமிழக சட்டசபையில் சபாநாயகரின் செயல்பாடு அவரது பதவியின் கண்ணியத்தையும் அவையின் மாண்பையும் குறைத்துவிட்டது என ஆளுநர் மாளிகை கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு தயாரித்த ஆளுநர் உரையில் உண்மைக்கு புறம்பான கருத்துகள் இருந்தன. தேசிய கீதம் தமது உரைக்கும் முன்பும் பின்பும் இசைக்கப்பட ஆளுநர், முதல்வருக்கும் சபாநாயகருக்கும் பலமுறை கடிதம் எழுதியிருந்தார்.

ஆனால் ஆளுநரின் அறிவுறுத்தலை அரசு நிராகரித்துவிட்டது. அரசின் சாதனைகளை பிரதிபலிப்பதற்கு பதில் ஆளுநர் உரையில் தவறான கருத்துகள் இடம் பெற்றிருந்தன. இதனால்தான் தமிழக அரசின் உரையை ஆளுநர் புறக்கணித்தார். ஆளுநர் உரையை சபாநாயகர் படித்து முடித்தவுடன் தேசிய கீதம் பாட அனைவரும் எழுந்தனர்.
அப்போது வழக்கமான நடைமுறையை பின்பற்றாமல் ஆளுநரை சபாநாயகர் அப்பாவு விமர்சிக்க தொடங்கிவிட்டார். சபாநாயகரின் செயல்பாடு அவரது பதவியின் கண்ணியத்தையும் அவையின் மாண்பையும் குறைத்துவிட்டது. தாம் கோட்சே, சாவர்க்கரின் வாரிசு என சபாநாயகரின் குற்றச்சாட்டு அவருடைய பதவியின் கண்ணியத்தை குறைத்துவிட்டது. இவ்வாறு ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
1. அரசு தயாரித்த ஆளுநர் உரையானது கடந்த 9ஆம் தேதி ஆளுநர் அலுவலகத்திற்கு கிடைக்கப் பெற்றது. அந்த உரையில் உண்மைக்கு புறம்பான கருத்துகள் இருந்தன.
2. இதையடுத்து ஆளுநர் கீழ்கண்ட அறிவுரைகளை வழங்கி அந்த கோப்பை திருப்பி அனுப்பிவிட்டார். ஆளுநர் அறிவுரையில் கூறியிருந்ததாவது:
- தேசியக் கீதத்திற்கு மரியாதை தரும் வகையில் ஆளுநரின் உரைக்கு முன்பும் பின்பும் தேசியக் கீதம் இசைக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. இது தொடர்பாக ஆளுநர், முதல்வருக்கும் சபாநாயகருக்கும் பலமுறை கடிதம் எழுதியிருந்தார்.
- ஆளுநரின் உரை என்பது அரசின் சாதனைகள், கொள்கைகள், நலத் திட்டங்களை பிரதிபலிக்க வேண்டுமே தவிர தவறான கருத்துகளுடனும் அப்பட்டமாக அரசியல் கருத்துகளை வெளிப்படுத்துவதுமாக இருத்தல் கூடாது.
3. மேற்கண்ட இந்த இரு ஆளுநரின் அறிவுரைகளையும் தமிழக அரசு நிராகரித்துவிட்டது.
4. ஆளுநர் உரை இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அப்போது சபாநாயகர், முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தமிழக மக்கள் ஆகியோருக்கு வாழ்த்துகளை ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். இதையடுத்து உரையில் இடம் பெற்றிருந்த திருவள்ளுவரின் 738 ஆவது குறளை வாசித்தார்.
பிறகு இந்த உரையில் உண்மைக்கு புறம்பான கருத்துகள் இருப்பதாகவும் இத்தகைய உரைக்கு நான் குரல் கொடுப்பது அரசியலமைப்பை கேலிக் கூத்தாகும் செயலாகிவிடும் என்பதாலும் உரையை முடித்துக் கொண்டார். தமிழக மக்களின் நன்மைக்கான திட்டங்களுடன் இந்த கூட்டத் தொடர் நல்லபடியாக முடிய வேண்டும் என வாழ்த்தவும் செய்தார்.
5. அதன் பிறகு ஆளுநர் உரையை சபாநாயகர் தமிழில் வாசித்தார். அவர் உரையை வாசித்து முடிக்கும் வரை ஆளுநர் அவையில் அமர்ந்திருந்தார்.
6. ஆளுநர் உரையை சபாநாயகர் வாசித்து முடித்த போது தேசிய கீதம் பாடப்படும். இது வழக்கமான நிகழ்வு என்பதால் தேசிய கீதம் பாடுவதற்காக ஆளுநர் எழுந்து நின்றார். அப்போது வழக்கமான நடைமுறையை பின்பற்றாமல் ஆளுநரை சபாநாயகர் அப்பாவு விமர்சிக்க தொடங்கிவிட்டார். சபாநாயகரின் செயல்பாடு அவரது பதவியின் கண்ணியத்தையும் அவையின் மாண்பையும் குறைத்துவிட்டது. தாம் கோட்சே, சாவர்க்கரை பின்பற்றுபவர் என சபாநாயகரின் குற்றச்சாட்டு அவருடைய பதவியின் கண்ணியத்தை குறைத்துவிட்டது.
ஆளுநரை சபாநாயகர் விமர்சித்ததை அடுத்து அவையின் கண்ணியத்திற்கும் அவருடைய பதவியின் மாண்புக்கும் மதிப்பளிக்கும் வகையில் அவையிலிருந்து ஆளுநர் வெளியேறினார். இவ்வாறு ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
என்ன நடந்தது: இந்த ஆண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் இன்றைய தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி அவைக்குள் வந்து உரையை வாசிக்க ஆயத்தமாகினார். அப்போது ஆளுநர் ரவி, சட்டசபையின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என தொடர்ச்சியாக நான் வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. அரசு தயாரித்த உரையில் இடம் பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாகவும் தார்மீகத்திற்கு முரணாகவும் உள்ளன.
இத்தகைய உரைக்கு நான் குரல் கொடுப்பது அரசியலமைப்பை கேலிக் கூத்தாகும் செயலாகிவிடும் என்பதால் இத்துடன் எனது உரையை முடித்துக் கொள்கிறேன். வாழ்க தமிழகம், வெல்க பாரதம்.. நன்றி என ஆளுநர் தெரிவித்தார். அதாவது தமிழக அரசு எழுதி கொடுத்த உரையை முழுவதுமாக படிக்காமல் அவர் புறக்கணித்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications