தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம்- அரசு ஆலோசகராக சண்முகம்!
சென்னை: தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் சண்முகம், தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளர்.
தமிழக அரசின் தலைமை செயலாளரான சண்முகத்தின் பதவி காலம் கடந்த ஆண்டு ஜூலை 31-ந் தேதியுடன் முடிவடைந்தது. அவரது பணிகாலத்தை மேலும் 3 மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்தது.

இதனை ஏற்று சண்முகத்தின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டது. அவரது பணி காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து மத்திய அரசில் பணியாற்றி வந்த தமிழக ஐஏஎஸ் அதிகாரியாக ராஜீவ் ரஞ்சன், உள்துறைச் செயலாளராக உள்ள எஸ்.கே.பிரபாகர் மற்றும் டி.வி.சோமநாதன் ஆகியோரில் ஒருவரை தலைமைச் செயலாளராக்க தமிழக அரசு முடிவு செய்தது.
இந்த நிலையில் ராஜீவ் ரஞ்சன் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசுப் பணியில் இருந்து ராஜீவ் ரஞ்சன் விடுவிக்கப்பட்டார்.
இதனையடுத்து தமிழக அரசின் 47-வது தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் பொறுப்பேற்கிறார்.
இதனிடையே தலைமை செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் சண்முகம், தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். ஓராண்டு காலத்துக்கு இப்பதவியில் சண்முகம் நீடிப்பார்.












Click it and Unblock the Notifications