சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார் ராஜீவ் ரஞ்சன்

தமிழக அரசின் 47வது தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் பொறுப்பேற்றுள்ளார். இவர் 1985ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பிரிவைச் சேர்ந்தவர் ராஜீவ் ரஞ்சன்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தின் 47வது தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் இன்று பொறுப்பேற்றார். தனது இருக்கையில் அமர்ந்து இன்று பணிகளைத் தொடங்கினார். இவர் 1985ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பிரிவைச் சேர்ந்தவர் ராஜீவ் ரஞ்சன்.

தமிழக தலைமைச் செயலாளராக இருந்த கே.சண்முகம். 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் தேதி தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்திய ஆட்சிப் பணி தேர்வில் வென்று 1985ஆம் ஆண்டு தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வானார். பயிற்சி சப் கலெக்டராக தஞ்சையில் பணியாற்றிய அவர், நெல்லை சேரன்மாதேவி சப் கலெக்டராகவும் பணியாற்றினார்.

Rajeev Ranjan takes charge as the Chief Secretary of the govt of TN

கிரிஜா வைத்தியநாதன் ஓய்வுக்குப்பின் தலைமைச் செயலராக பதவியேற்றார். இந்நிலையில், அவரின் பதவிக்காலம் 2020 ஜூலை 31ஆம் தேதியுடன் முடிவடைந்தது. கொரோனா பரவல் அதிகமாக இருந்த காலமான அப்போது, அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று அவரின் பதவி ஓய்வு காலத்தை மத்திய அரசு இரண்டு முறை நீட்டித்தது. இந்தநிலையில், நேற்றுடன் அவரின் பதவி நீட்டிப்பு காலம் முடிவுக்கு வந்த நிலையில், புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சனை மத்திய அரசு நியமித்தது. மத்திய அரசின் மீன்வளத்துறையின் செயலாளராக இருந்த அவரை சில தினங்களுக்கு முன்னர் மத்திய அரசு அந்தப் பணியில் இருந்து விடுவித்தது.

இதனைத் தொடர்ந்து, ராஜீவ் ரஞ்சன் 47ஆவது தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர், 1985ஆம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்தவர். இன்று பொறுப்பேற்றுக்கொண்ட அவர் தலைமைச் செயலகத்தில் உள்ள தனது இருக்கையில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்து போட்டு தனது பணியைத் தொடங்கினார்.

English summary
Rajeev Ranjan take charge as the 47th Chief Secretary of Tamil Nadu today. He sat down in his seat and began work today. Rajeev Ranjan joined the IAS in 1985.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X