Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மோசமான அரசியல்".. ராஜேஸ்வரி பிரியாவுக்கு தில்லை பார்த்தீங்களா? .. அப்படியே அதிர்ந்து பார்த்த பாமக

Subscribe to Oneindia Tamil

சென்னை: அப்பாவி மக்களை பயன்படுத்தி உணர்ச்சிவசப்படுத்தி, சாதிப்பற்றை ஏற்றி, வாக்குகளை பெறுவது, பணம் கொடுத்து வாக்குகள் பெறுவதைவிட மோசமான செயல் ஆகும்" என்று ராஜேஸ்வரி பிரியா கொந்தளித்திருக்கிறார்.

ஆரம்ப காலங்களில், பாமகவில் இணைந்து செயல்பட்டவர் ராஜேஸ்வரி பிரியா.. அக்கட்சியின் மாநில நிர்வாகியாகவும் இருந்தவர்.. 2019 தேர்தலின்போது, அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்ததை கண்டித்து, பாமகவில் இருந்து அதிரடியாக விலகினார்.
ஆனால், பாமகவிலிருந்து விலகியதுமே, பாமகவினர் தன்னை விமர்சித்து வீடியோக்களை வெளியிடுவதாக ராஜேஸ்வரி பிரியா செய்தியாளர்களிடம் குற்றஞ்சாட்டியிருந்தார்.

Vikravandi Byelection 2024 Rajeswari Priya PMK 2024

'இதுவரைக்கும் பாமகவில் 2 வருடம் இருந்திருக்கிறேன். ஆனால் ஒரு தொந்தரவும் அப்போ எனக்கு இல்லை. இப்போது வெளியே வந்துவிட்டேன். தொந்தரவு வர ஆரம்பிச்சிருக்கு. அவர்கள் ஜாதி பெண்களுக்கு இப்படி ஒரு துன்புறுத்தல் அங்கே இல்லை. அவங்க ஜாதி நான் இல்லை என்பதால் என்னை இப்படி துன்பப்படுத்தறாங்களோன்னு தெரியல. ஆனா இதுகூட காரணமாக இருக்கலாம்" என்று ஆதங்கத்துடன் தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.

திமுக அரசு: இதற்கு பிறகு "அனைத்து மக்கள் அரசியல் கட்சி" என்ற பெயரில் புதுக்கட்சியை ஆரம்பித்து, பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார் ராஜேஸ்வரி பிரியா.. இயல்பாகவே சமூக அக்கறை நிறைந்த ராஜேஸ்வரி பிரியா, இளைய சமுதாயத்துக்கு தேவையான கருத்துக்களை விடாமல் எடுத்து சொல்லி வருவதுடன், திமுக அரசையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இப்படிப்பட்ட சூழலில்தான், நடைபெற போகும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்தும் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார். அதுவும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் கருத்துக்களுக்கு பகிரங்கமாகவே கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து ராஜேஸ்வர் பிரியா அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

சாதி அரசியல்: "சாதி அரசியலை பிரதானபடுத்தும் அரசியல் கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிப்படையாக நம்முடைய சாதியினர் விழித்து எழ வேண்டுமென்று விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்காக பாமக நிறுவனர் திரு ராமதாஸ் அவர்கள் கருத்து வெளியிடுவது தேர்தல் விதிமுறைக்கும்,அரசியல் கட்சிகளின் சட்ட விதிகளுக்கும் எதிரானது ஆகும்.

இன்றைய மோசமான அரசியல் சூழ்நிலையில் மதம்(ஆதரிப்பது,எதிர்ப்பது), சாதி,கடவுள் , மொழி, இனம் என பிரித்தாளும் சூழ்ச்சிகளை மட்டுமே பிரதான அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வாக்குகள் சேகரித்து வருவது வேதனையாக உள்ளது. மக்களின் பிரச்சினைகள் மறைக்கபட்டு மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடும் அரசியல் போக்கு மாற வேண்டும்.

ஓட்டுக்கு பணம்: சமயம் பார்த்து சாதிக்காரர்களை பயன்படுத்திகொள்வதனை அந்த சாதியினரும் புரிந்துகொள்ள வேண்டும். அப்பாவி மக்களை பயன்படுத்தி உணர்ச்சிவசப்படுத்தி சாதிப்பற்றை ஏற்றி வாக்குகளை பெறுவது, பணம் கொடுத்து வாக்குகள் பெறுவதைவிட மோசமான செயல் ஆகும்" என்று தெரிவித்துள்ளார்.

ராஜேஸ்வரி பிரியாவின் இந்த அறிக்கையானது, ஒட்டுமொத்த பாமக தரப்பினரின் கவனத்தை பெற்று வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு டாக்டர் ஐயா, பாமகவினருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்..

பாமக: அதில், "வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை. தமிழ்நாட்டில் திமுக வளர்ந்ததற்கு காரணம் வன்னியர்கள் தான். ஆனால், வன்னியர்களால் ஆட்சிக்கு வந்த திமுக, அதற்கு காரணமான வன்னியர்களுக்கு செய்ததெல்லாம் துரோகம் தான். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவுக்கு கிடைக்கும் தோல்வி தான் வன்னிய மக்களுக்கும் சமூகநீதியை வென்றெடுத்துக் கொடுக்கும்" என்று கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+