ரஜினியை காலம் முழுக்க தூங்க விட மாட்டார் விஜய்: ப்ளூ சட்டை மாறன்
சென்னை: சமீபத்தில் துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அஜித் குமாரின் அணி 3வது இடத்தை பெற்றது. இதற்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதற்கிடையே ரஜினிகாந்த்தின் வாழ்த்து தொடர்பாகக் கருத்துச் சொல்லியுள்ள ப்ளூ சட்டை மாறன், விஜய் ரசிகர்களைச் சீண்டுவதற்காகவே ரஜினி இதுபோல வாழ்த்து சொன்னதாக விமர்சித்துள்ளார்.
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக இருந்தாலும் அவருக்கு கார் ரேஸில் தான் அதிக ஆர்வம். சில ஆண்டுகள் கார் ரேஸை தவிர்த்துவிட்டு சினிமாவில் கவனம் செலுத்தி வந்த அவர் மீண்டும் கார் ரேஸில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.

அஜித்குமார்:
இதற்காக அஜித்குமார் ரேஸிங் என்ற பெயரில் தனியாக டீமையும் ஆரம்பித்து இருந்தார். துபாயில் நடைபெற்ற 24 மணி நேர கார் ரேஸில் அவரது அணி பங்கேற்றது. இந்த 24 மணி நேர ரேஸில் அஜித்குமார் ரேஸிங் 3வது இடத்தை பிடித்தது. இதற்காக அஜித்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
அதேபோல நடிகர் ரஜினிகாந்த்தும் அஜித்திற்கு வாழ்த்து சொல்லி இருந்தார். பொதுவாக ரஜினிகாந்த் பெரும்பாலும் இதுபோல எதுவும் வாழ்த்துக் கூற மாட்டார். இதனால் அஜித்திற்கு ரஜினி வாழ்த்து சொன்னது இணையத்தில் டிரெண்டாகியுள்ளது. இதற்கிடையே இது தொடர்பாகக் கருத்து கூறியுள்ள ப்ளூ சட்டை மாறன், விஜய்யை சீண்டவே ரஜினி வாழ்த்து சொல்லி இருப்பதாகக் கூறியுள்ளார்.
ப்ளூ சட்டை மாறன்:
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "கார் ரேசில் தல வென்றதற்குத் தலைவர் வாழ்த்து ட்வீட் போட்டுள்ளார். அரசியலுக்கு வரப் பயந்து புறமுதுகிட்டு ஓடியவர்.. தான் உண்டு. தன் ஷூட்டிங், டப்பிங் உண்டு என இருக்க மனமில்லை. நான் முன்பு சொன்னதுபோல.. தமிழக அரசியலைத் தீர்மானிக்கும் கிங் மேக்கராக.. அதாவது தனது குருநாதர் சோ அவர்களைப்போல ஆகவேண்டுமென முயல்கிறார்.
ஆனால் சோவிற்கு உள்ள அரசியல் அறிவில் 1% கூட இவருகில்லை என்பது நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அது இவருக்குத் தெரியாமல் இருப்பதில் ஆச்சரியமே இல்லை. தலைவருக்கு இரண்டே ஆசைகள்தான்.
1. தனது எஜமானர்களின் நீண்டகால எதிரியான திமுக தோற்க வேண்டும்.
2. திரைப்பட வியாபாரம் மற்றும் வசூலில் தன்னை தோற்கடித்த விஜய் மீதான காண்டு.
விஜய் மீது கோபம்:
விஜய் இனி படங்களில் நடிப்பதில்லை என்றதும் கொஞ்சம் பெருமூச்சு விட்டார். ஆனால் தற்போது அரசியலுக்கு வந்து ஜெயித்து விடுவாரோ எனும் பதட்டம் தொற்றிக்கொண்டது. விஜய் முதல்வராக உள்ள மாநிலத்தில் வாழ்வதைத் தலைவரால் ஜீரணிக்கவே இயலாது. இந்த புத்தாண்டில் நல்லவனை ஆண்டவன் கை விட மாட்டான். கெட்டவங்களை கை விட்ருவான் எனக் குறிப்பிட்டார்.
எப்போதுமே வெறும் வாழ்த்து செய்தி மட்டும் போடுபவர்.. இம்முறை இப்படி ஒரு உள்குத்தை சொருகியுள்ளார். அதாவது விஜய் கெட்டவராம். அஜித் நல்லவராம். தற்போது அஜித் ரேசில் வென்றதற்கு.. திடீர் அதிசயமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அதாவது விஜய் மற்றும் அவரது ரசிகர்களை மறைமுகமாக சீண்டுகிறாராம். தலைவரே எதிர்பார்க்காத ட்விஸ்ட் ஒன்று 2026 தேர்தல் முடிந்த பிறகு வர வாய்ப்புண்டு.
தூங்க விடமாட்டார் போல:
ஒருவேளை தேர்தலில் தவெக தோற்றால் விஜய் அரசியலை விட்டு விலகலாம் அல்லது கமலை போல சினிமாவில் நடித்தபடியே பார்ட் டைம் அரசியல் செய்யலாம். அப்படி ஒரு நிலைமை வந்தால்... மீண்டும் அவர்தான் வியாபாரம் மற்றும் வசூலில் நம்பர் ஒண்ணாக இருப்பார். தலைவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படத்தின் வசூல்.. GOAT வசூலில் 30% கூட இல்லை. ஆகவே... மின்சார கண்ணாவால்.. தலைவருக்கு காலம் முழுக்க ஷாக் உறுதி. அவர் உங்களை நிம்மதியாகத் தூங்கவே விடமாட்டார்" என்று தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications