ரஜினிகாந்தால் மட்டுமே தமிழகத்தை காப்பாற்றி சரித்திர சாதனை படைக்க முடியும் - தமிழருவி மணியன்
ஊழல் மலிந்த திராவிட கட்சிகளிடமிருந்து தமிழகத்தை விடுவிக்க, ரஜினிகாந்தால் மட்டுமே, அந்த சரித்திர சாதனையை நிகழ்த்திக்காட்ட முடியும்.
சென்னை: காந்தி பிறந்தநாளில், காமராஜர் மறைந்தநாளில் இந்த இருவர் தம் கனவுகளை நனவாக்க அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கும் ரஜினிகாந்த் முயற்சிக்கு உறுதுணையாக நிற்போம் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார். ஊழல் மலிந்த திராவிட கட்சிகளிடமிருந்து தமிழகத்தை விடுவிக்க, ரஜினிகாந்தால் மட்டுமே, அந்த சரித்திர சாதனையை நிகழ்த்திக்காட்ட முடியும் என்றும் தெரிவித்துள்ளார் தமிழருவி மணியன்.
காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசியல் களத்தில் மாற்று அரசியலை காந்திய மக்கள் இயக்கம் தான் அறிமுகப்படுத்தியது. 2014ஆம் ஆண்டில் 2 திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு கூட்டணியை உருவாக்கி 75 லட்சம் வாக்குகளைப் பெறுவதற்கான அடித்தளத்தை அமைத்தவர்கள் நாம். வரவிருக்கும் சட்ட மன்றத் தேர்தலில் மாற்று அரசியலை முன் நிறுத்துவோம். ஊழல் மலிந்த 2 திராவிட கட்சிகளிடமிருந்து தமிழகத்தை விடுவிக்க, ரஜினிகாந்தால் மட்டுமே, அந்த சரித்திர சாதனையை நிகழ்த்திக்காட்ட முடியும்.
சமய நல்லிணக்கம், மதச்சார்பற்ற ஆட்சிமுறை, ஊழலுக்கு எள்ளளவும் இடம் தராத நேரிய நிர்வாகம், வெறுப்பு அரசியலுக்கு இடமின்றி அனைவரையும் அன்பினால் ஆரத் தழுவி அரவணைக்கும் உயர்பண்பு, சாதி மத உணர்வுகளுக்கு எந்த நிலையிலும் இடம் தராத மேன்மையான வாழ்க்கை முறை ஆகியவையே காந்தியத்தின் நல்லடையாளங்கள். இவையே காமராஜர் பின்பற்றிய வழித்தடங்கள்.
காந்தி பிறந்தநாளில், காமராஜர் மறைந்தநாளில் இந்த இருவர் தம் கனவுகளை நனவாக்க அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கும் ரஜினிகாந்த் முயற்சிக்கு உறுதுணையாக நிற்போம் என்று கூறியுள்ளார் தமிழருவி மணியன்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications