சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரஜினிகாந்த் பிரஸ் மீட்டில் பயன்படுத்திய 'ராஜ தந்திரங்களை' கவனிச்சீங்களா?

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினி பேட்டி- வீடியோ

    சென்னை: எதைப்பேசினாலும் சர்ச்சையாகிவிடுகிறது, அப்புறம் என்னதான் செய்வது? எல்லாவற்றுக்கும் ரெண்டு, ரெண்டு பதிலை சொல்லிவச்சிருவோம். அவங்கவங்களுக்கு தேவைப்படுவதை எடுத்துக்கொள்ளட்டுமே என்ற முடிவுக்கு ரஜினிகாந்த் வந்துவிட்டார் என்பதை இன்றைய அவரது பேட்டி உணர்த்துகிறது.

    பேட்ட திரைப்பட சூட்டிங் நிறைவடைந்துவிட்ட நிலையில், சென்னைக்கு திரும்பினார் ரஜினிகாந்த். அப்போது விமான நிலையத்தில் நிருபர்கள் அவரிடம் கேள்விகளை எழுப்பினர்.

    ஷேவிங் செய்த முகத்தோடு ஃபிரெஷ்ஷாக காணப்பட்ட ரஜினிகாந்த், தனது பேட்டி முறையிலும் கூட பிரெஷ்ஷாக புது யுக்தியை கையாண்டதை கவனிக்க முடிந்தது.

    பஞ்சாப் கோர விபத்தில் மக்களை காப்பாற்ற முயன்ற ராவண வேடமிட்டவர் ரயிலில் சிக்கி பலி பஞ்சாப் கோர விபத்தில் மக்களை காப்பாற்ற முயன்ற ராவண வேடமிட்டவர் ரயிலில் சிக்கி பலி

    எதுக்கு வம்பு

    எதுக்கு வம்பு

    முன்பெல்லாம் முகத்தில் அறைவதை போல மனதில் பட்டதை அப்படியே சொல்லி வருவார் ரஜினிகாந்த். தூத்துக்குடி போராட்டத்தில் வன்முறையாளர்கள் ஊடுருவினர் என்ற கருத்தாக இருக்கட்டும், சென்னையில் பத்திரிகையாளர்களை பார்த்து ஏய்.. என்று உச்ச ஸ்தாபியில் சத்தம்போட்டதாக இருக்கட்டும் இதெல்லாம் ரஜினிகாந்த் பழைய பேட்டிகளின் எடுத்துக்காட்டு.

     நாம நல்ல புள்ளையாவே இருந்துடுவோம்

    நாம நல்ல புள்ளையாவே இருந்துடுவோம்

    ஆனால், இன்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது என்று சொல்வார்களே, அதுபோல, கருத்துக்களை கூறினார் ரஜினிகாந்த். தனது மனதில் என்ன உள்ளது என்பதையும் சொன்னார். ஆனால் மற்றொரு தரப்பு அதை தவறாக எடுத்துக்கொண்டுவிட கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வும் அதில் இருந்தது.

    கட்சிக்கு 2 பதில்

    கட்சிக்கு 2 பதில்

    டிசம்பர் 12ம் தேதி கட்சி ஆரம்பிக்க உள்ளீர்களாமே என்ற கேள்விக்கு உடனே இல்லை என்று பதிலளித்தார் ரஜினிகாந்த். ஆனால் கட்சி பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டது என்றும் அவர் கூறினார். கட்சி பணிகள் முடிந்துவிட்ட பிறகும் டிசம்பரில் கட்சி துவங்க போவதில்லை என்றும் கூறிவிட்டார் ரஜினிகாந்த். அதேபோல சபரிமலை விவகாரத்தில், தனது கருத்தான, அனைத்து வயது பெண்களும் போகக்கூடாது என்பதை பதிவு செய்த ரஜினிகாந்த், உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாகவும் கூறினார். ஒரு சில கோயில்களில் ஒரு சில ஐதீகம் இருக்கும். அதை பின்பற்றலாமே என்றார்.

    நல்லதுதான், ஆனாலும்

    நல்லதுதான், ஆனாலும்

    Metoo இயக்கம் குறித்த கேள்விக்கு, இது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நல்ல ஆயுதம், சாதகமான ஒன்று என்று தெரிவித்த, ரஜினிகாந்த், ஆனால் பெண்கள் அதை தவறாக பயன்படுத்திவிட கூடாது என்றார். இதனால் குழப்படைந்த நிருபர் ஒருவர், 'மீற்டு' இயக்கத்திற்கு உங்கள் ஆதரவு இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்க, அப்படியில்லை. இது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சாதகமான விஷயம் என்றார்.

    விமர்சனத்திற்கு தப்பவில்லை

    விமர்சனத்திற்கு தப்பவில்லை

    "உங்களுக்கு எந்த பதில் வேண்டுமே நீங்களே சண்டை போடாம பிரிச்சி எடுத்துக்கோங்கப்பா.." என்று சொல்வதை போல இருந்தது, ரஜினிகாந்த்தின் இந்த பேட்டி. இப்படி ஒவ்வொன்றுக்கும் இரு கருத்துக்களை கூறினாலும், இதையுமே நெட்டிசன்கள் கிண்டல்தான் செய்கிறார்கள். பார்ப்போம், அடுத்து தலைவர் எந்த பாணியில் பிரஸ் மீட் செய்ய வருகிறார் என்பதை.

    English summary
    Actor Rajinikanth change his style of press meet from his earlier ones, on today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X