சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"வாழ்வா சாவா நிலையில் ஸ்டாலின்.. நிரூபிச்சாகணும்".. நேரடியாகவே "குறி" வைத்த ரஜினிகாந்த்!

ஸ்டாலின் மீது ரஜினிகாந்த் நேரடி குற்றச்சாட்டு வைத்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "வாழ்வா? சாவா?" என்ற கேள்வியை எழுப்பி... திமுகவையும், ஸ்டாலினையும் மொத்தமாக விமர்சித்து.. ஸ்டிரைட்டாக குறி வைத்து அடித்துள்ளார் ரஜினிகாந்த்!!

Recommended Video

    Rajinikanth press meet| Full Speech|ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பு... முழு வீடியோ

    54 வருஷங்களாக இருந்து வரும் இரு கட்சிகளை அகற்றுவதற்கான நேரம் இது.. இதை ஜனங்க யோசனை செய்யணும்.. இது அரசியல் மாற்றத்திற்கும், ஆட்சி மாற்றத்திற்கும் சரியான சந்தர்ப்பம் என்று பேசியது அதிமுகவை மட்டுமல்ல.. திமுகவை நிறையவே அதிர வைத்துள்ளது

    குறிப்பாக.. ஸ்டாலினுக்கு வாழ்வா, சாவா என்ற நிர்பந்தம் உள்ளது என்று நேரயாகவே அட்டாக் செய்துள்ளார்.. இல்லை, இல்லை, ஸ்டாலினின் தலைமைத்துவத்தை அசிங்கப்படுத்தி உள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.

    இது ராஜதந்திரம்.. ஆனால் ரசிகர்கள் ஏற்கவில்லை.. 'சின்ன' மனவருத்தத்தை போட்டு உடைத்த ரஜினிகாந்த்!இது ராஜதந்திரம்.. ஆனால் ரசிகர்கள் ஏற்கவில்லை.. 'சின்ன' மனவருத்தத்தை போட்டு உடைத்த ரஜினிகாந்த்!

    ஆதரவாளர்

    ஆதரவாளர்

    இதற்கு என்ன காரணமாக இருக்கும்? உண்மையிலேயே ரஜினியை கண்டு திமுக கொஞ்சம் நடுங்குவதாகதான் சொல்லப்பட்டு வருகிறது.. காரணம், பாஜக ஆதரவாளர் என்றுதான் ரஜினி இதுநாள் வரை கருதப்பட்டு வந்தார்.. இதன்மூலம் தமிழகத்தில் உள்ள 12 சதவித சிறுபான்மையினரின் வாக்குகள் ரஜினிக்கு போகவிடாமல் தடுக்கப்படும் என்றும் திமுக நம்பியது.. ஆனால் அதையெல்லாம்தான் ரஜினி உடைத்து கொண்டு வருகிறார்..

    காளி

    காளி

    தான் காவி அல்ல "காளி" என்பதை திமுகவுக்கு பல ரூபங்களில் புரிய வைத்தும் வருகிறார்.. இதை பார்த்துதான் திமுக அதிர்ந்தது.. தாங்களும் இந்து மத ஆதரவாளர்கள்தான் என்ற அரசியல் யுக்தியை பிகே மூலம் கையில் எடுத்துள்ளதற்கு காரணமே ரஜினிதான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. எனினும், இந்துமத வாக்குகள்தான் இருவருக்கும் குறி... இதை உடைக்கவே இரு தரப்பும் தனித்தனியாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதுதான் இவர்களுக்குள் நடக்கும் பனிப்போர்!

    வாழ்வா, சாவா

    வாழ்வா, சாவா

    இதற்கு அடுத்தபடியாக, ஸ்டாலினுக்கு வாழ்வா சாவா போராட்டம் என்கிறார் ரஜினிகாந்த்.. இவ்வளவு நாள் அதாவது கருணாநிதி இறந்தும் ஆட்சியை கைப்பற்ற ஸ்டாலினால் முடியவில்லை என்பதுதான் ரஜினியின் பேச்சின் அர்த்தம்.. இன்னும் சொல்லபோனால், ஸ்டாலினை இதைவிட மோசமாக யாராலும் விமர்சிக்க முடியாது.. திறனற்றவர், என்று சொல்வதை போலதான் இது.. கிட்டத்தட்ட திமுகவுக்கே ரஜினி சவால் விட்டுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.. திராணி இருந்தா நிரூபிக்கட்டும் பார்க்கலாம் என்றுதான் திமுகவை டார்கெட் செய்து பேசியுள்ளார்.

    எதிரிகள்

    எதிரிகள்

    ஆளும் தரப்பை விட்டுவிட்டு, ஸ்டாலினுக்கு ரஜினி குறி வைக்க என்ன காரணம்? ரஜினிக்கு இந்த தைரியத்தை விதைத்தது யார்? திமுகவின் எதிரிகள் பலரும் இப்போது ரஜினியுடன் கை கோர்த்து வருகிறார்கள். இந்த நிலையில் ரஜினியின் இந்த பேச்சு பல கேள்விகளை எழுப்புகிறது... அதனால் ஸ்டாலின் மீதான காழ்ப்புணர்ச்சிக்கு காரணம் இவர்களாக இருக்குமா என்றும் தெரியவில்லை.

    முக அழகிரி

    முக அழகிரி

    இறுதியாக நம் அனைவரின் எண்ணமும் முக அழகிரி மேல் தாவுகிறது.. ரஜினிகாந்த் - முக அழகிரியை பொறுத்தவரை ஆழமான நட்பு.. பிடிமானம்.. நெருக்கமான உறவு.. ரஜினி அரசியல் பிரவேசம் என்றாலே அழகிரி பேச்சு அங்கு எழாமல் இருக்காது.. கலைஞர் இறந்த பிறகு அழகிரியை ஒரேயடியாக கட்சி நீக்கி ஒதுக்கிவிட்ட நிலையில், தற்போது ரஜினி அரசியலில் அழகிரியும் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இருவரும் இணைவது உறுதி என்றும் சொல்கிறார்கள். பேசிக் கூட முடித்தாகி விட்டதாகவும் சொல்லப்படுகிறது. எனவே அழகிரியை வைத்து ஸ்டாலினை சீண்டப் போகிறாரா ரஜினி என்ற கேள்வி எழுகிறது.

    பதிலடி?

    பதிலடி?

    திமுகவை நோக்கி ரஜினி காந்த் எழுப்பியுள்ள கேள்வி சாதாரணமானதல்ல. மிக பெரிய கேள்வி.. இதற்கு திமுக தரப்பு எப்படி பதிலடி கொடுக்கும் என்பது எதிர்பார்ப்புக்குரியது.. ஆனால் ரஜினிகாந்ததுக்கு அவர்கள் அளிக்கக் கூடிய சரியான பதில்.. வரும் சட்டசபைத் தேர்தலில் ரஜினி கட்சியை 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க வைப்பதாக மட்டுமே இருக்க முடியும் என்பதும் இங்கு முக்கியமானது.

    English summary
    actor Rajinikanth criticized dmk leader mk stalin directly
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X