Jailer 2: ஜெயிலர் 2 ரிலீஸ் - தியேட்டரில் டான்ஸ் ஆடி ‘அலப்பறை’ கிளப்பிய ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை காசி திரையரங்கில் 'ஜெயிலர் 2' ரிலீஸ் கொண்டாட்ட விழாவில் ரசிகர்களுடன் உற்சாகமாக பேசி நடனமாடினார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா.

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம் இன்று (அக்டோபர் 15) வெளியாகும் நிலையில், தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் பிரம்மாண்ட பேனர்கள், கட்அவுட்கள் வைத்து படத்தை வரவேற்று வருகின்றனர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மீதான ரசிகர்களின் அன்பும் ஆதரவும் குறைந்துவிடவில்லை என்பதற்கு 'ஜெயிலர் 2' ரிலீஸை முன்னிட்டு அவர்கள் மேற்கொண்டு வரும் கொண்டாட்டங்களே சாட்சி.

Rajinikanth Daughter Soundarya Dances With Fans at Jailer 2 Celebration in Chennai

ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி - நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'ஜெயிலர் 2'. ரஜினியின் 172வது படமாக உருவாகியுள்ள இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், விஜய் சேதுபதி, வித்யா பாலன், மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு, மிர்னா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் ஆகியோரும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ஜெயிலர் 2 திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் யு/ஏ சான்றிதழுடன் இன்று வெளியாகிறது. தமிழகத்தில் முதல் ஒரு வாரத்துக்கு காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி உள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் இன்று காலை 9 மணிக்கு ரிலீஸ் ஆகிறது 'ஜெயிலர் 2'.

'ஜெயிலர் 2' திரைப்படத்தின் ரிலீஸை முன்னிட்டு ரஜினிகாந்த் ரசிகர்கள் பல்வேறு கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வருகின்றனர். அந்தவகையில், சென்னையில் உள்ள காசி தியேட்டர், ரசிகர்களின் கொண்டாட்டத்தால் களைகட்டியது. ரஜினிகாந்த் ரசிகர்கள் பலரும் கூடி, டான்ஸ் ஆடி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், பெண் ஆட்டோ ஓட்டுநர்களும் டான்ஸ் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

காசி திரையரங்கில் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் டான்ஸ் ஆடியுள்ளார். சென்னையில் உள்ள காசி திரையரங்கில் நடைபெற்ற எல்.இ.டி கட் அவுட் வெளியீட்டு விழாவில் சௌந்தர்யா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். ரஜினி உருவத்துடன் அமைக்கப்பட்ட எல்.இ.டி லைட் கட் அவுட்டை திறந்து வைத்தார்.

மேலும், சௌந்தர்யா ரஜினிகாந்த், ரஜினி ரசிகர்களுடன் இணைந்து 'ஜெயிலர் 2' படத்தின் பாடலுக்கு நடனமாடினார். ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா, தியேட்டரில் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நிகழ்வு, ஜெயிலர் 2 திரைப்பட வெளியீட்டின் உற்சாகத்தை மேலும் அதிகரித்துள்ளது.

ஜெயிலர் முதல் பாகத்தில் இடம்பெற்ற அதிரடி காட்சிகள், அனிருத்தின் பின்னணி இசை மற்றும் ரஜினிகாந்தின் ஸ்டைலான நடிப்பு ஆகியவை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. இதனால் இரண்டாம் பாகத்திலும் அதேபோன்ற விறுவிறுப்பான அனுபவம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+