Sekar Babu: நீங்க பேசுறது போர் அடிக்குது.. தவெக எம்எல்ஏ விஜய் தாமு அடித்த கமெண்ட்! கடும் டென்ஷனான சேகர் பாபு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பருவமழையை எதிர்கொள்வது குறித்து சென்னை ரிப்பன் மாளிகையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, விஜய் பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்ட நிலையில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவும் கலந்துகொண்டார். சேகர்பாபு பேசும்போது தவெக எம்.எல்.ஏ விஜய் தாமு போர் அடிக்கிறது என கமெண்ட் செய்ததால் அவர் டென்ஷன் ஆகி, உங்களுக்கு போர் அடிக்கிறது என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும். நான் என்ன அநாவசியமாக பேசிக்கொண்டு இருக்கிறோம்.. பிறகு எதற்கு என்னை இங்கு அழைத்தீர்கள் என காட்டமாக பேசினார்.

தமிழத்தில் வடகிழக்கு பருமழை நாளை தொடங்க உள்ளது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு பொறுப்பு அமைச்சர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Sekar Babu angered by TVK MLA Vijay Thamu s remarks

டென்ஷன் ஆன சேகர்பாபு

இந்த நிலையில், சென்னை ரிப்பன் மாளிகையில் ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, வெங்கட ரமணன், விஜய் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சென்னை மேயர் பிரியா, முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான சேகர்பாபு மற்றும் தவெக எம்.எல்.ஏ விஜய் தாமு ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்சியில் சேகர் பாபு பேசும் போது போர் அடிக்கிறது என்று விஜய் தாமு பேசியதால் மேடையிலேயே தனது அதிருப்தியை சேகர் பாபு வெளிப்படுத்தினார். விஜய் தாமுவை பார்த்து, உங்களுக்கு போர் அடிக்கிறது என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும். நான் என்ன அநாவசியமாக பேசிக்கொண்டு இருக்கிறோம்.. பிறகு எதற்கு என்னை இங்கு அழைத்தீர்கள் என காட்டமாக பேசினார்.

குற்றச்சாட்டாக கூறவில்லை

உடனே அருகில் இருந்த விஜய் பாலாஜி அவரை சமாதானம் செய்தார். தொடர்ந்து பேசிய சேகர் பாபு கூறியதாவது:- எதோ நாங்கள் வந்து குற்றச்சாட்டாக கூறவில்லை. ஜனநாயகத்தில் மதித்து நீங்கள் கூப்டீர்கள்.. நாங்களும் வந்தோம். அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறோம். நான் 5 வது முறை எம்.எல்.ஏ, சென்னையில் 6 தேர்தலை சந்தித்துள்ளேன். உள்ளாட்சி தேர்தலில் நின்றுள்ளேன்.

சின்ன வயதில் இருந்து இதே வேலையாகத்தான் ஓடிக்கொண்டு இருக்கிறோம். எதையுமே ஒரு குற்றச்சாட்டாக கொண்டு போகவில்லை. இந்த பணிகளை செய்தால் வெள்ளத்தை சமாளிக்கலாம். ஏனென்றால் வருகின்ற புயல் வெப்பத்தாக்கத்தையும், காற்றழுத்தத்தையும் அதிகமாக கொண்டு இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி சொல்கிறது" என்று கூறினார்.

மேயர் பிரியா பேச்சு

முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு வந்த திமுக எம்.எல்.ஏ சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா ஆகியோரை அமைச்சர்கள் எழுந்து நின்று வரவேற்றனர். மேயர் பிரியா பேசும் போது, நிகழ்ச்சிக்கு வந்து இருப்பவர்களை வரவேற்று பேசினார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெயரை மட்டும் குறிப்பிட்ட மேயர் பிரியா, மீதமுள்ள அமைச்சர்கள், தவெக எம்.எல்.ஏக்கள் பெயரை கூறாமல் தவிர்த்தார். மேயர் பிரியா கூறும் போது, "திமுக ஆட்சியில் மழை நீர் வடிகால் பணிகள், தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 1,500 கிலோ மீட்டர் தொலைவுக்கு மழை நீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன" என்றார்.

பின்னர் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில் கூறியதாவது:- கனமழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. வானிலை கணிப்புகளும் அதைத்தான் சொல்கின்றன. மண்டல அளவில் முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சர்களை நியமனம் செய்துள்ளோம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+