“எ.வ.வேலு ஏன் வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு போகணும்? இங்கு டாக்டர்கள் இல்லையா?” ஐகோர்ட் நீதிபதி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக மாநாட்டுக்காக ஏரியில் இருந்து மணல் எடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கவில்லை என காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

திமுக வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு, கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி, திருவண்ணாமலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டு திடலை சமன்படுத்துவதற்காக, அருகில் உள்ள மலப்பம்பாடி ஏரியில் இருந்து சட்டவிரோதமாக 12 ஏக்கர் பரப்பளவுக்கு, 10 முதல் 23 அடி ஆழத்திற்கு மண் எடுக்கப்பட்டாதாக புகார் எழுந்தது.

EV Velu

இதன் மூலம் அரசுக்கு 8 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கம் சார்பில், கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு, அவரது மகன் எ.வ.வே.குமரன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தங்களுக்கு எதிராக 'லுக் அவுட் நோட்டீஸ்' பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில், எ.வ.வேலுவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் லுக் அவுட் நோட்டீஸை எதிர்த்து எ.வ.குமரன் தாக்கல் செய்த மனுவுக்கு, பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி லட்சுமி நாராயணன், 'தமிழகம்தான் சிறந்த மருத்துவ சேவை வழங்குகிறது என கூறும் எ.வ. வேலு ஏன் வெளிநாட்டில் சிகிச்சைக்கு செல்ல வேண்டும்? இங்கு மருந்துவர்களே இல்லையா? அல்லது இங்கு உள்ள மருத்துவர்கள் மீது நம்பிக்கை இல்லையா?' என எ.வ வேலு தரப்பிடம் கேள்வி எழுப்பினார்.

பின்னர் எ.வ வேலு தாக்கல் செய்த மனுவை முடித்து வைத்தும், எ.வ.குமரன் மீதான மனு மீதான விசாரணையை அக்டோபர் 15 ஆம் தேதியான நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+