இந்தியாவையே உலுக்கிய 'ப்ளூ டிரம்’ கொலை வழக்கில் தீர்ப்பு.. கணவரை கொன்ற மனைவிக்கு மரண தண்டனை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தர பிரதேச மாநிலம், மீரட்டைச் சேர்ந்த கடற்படை அதிகாரியான சவுரவ் ராஜ்புட், தனது மனைவி மற்றும் அவரது ஆண் நண்பரால் கொலை செய்யப்பட்டு, ப்ளூ டிரம்மிற்குள் வைத்து சிமெண்ட் கலவை போட்டு மறைத்த வழக்கில் குற்றவாளிகளான முஸ்கான் மற்றும் சஹில் ஆகியோருக்கு மீரட் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் மீரட்​டைச் சேர்ந்​தவர் சவுரவ் ராஜ்புத். இவரது மனைவி முஸ்​கான் ரஸ்​தோகி. சவுரவ் கடற்படையில் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். அதன் காரணமாக அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்வார். முஸ்​கானுக்கு சஹில் ஷுக்லா என்பவரும் பழக்கம் ஏற்பட்டு அது திருமணத்தை மீறிய காதலாக மாறியுள்ளது.

Muskan and her lover get death sentence in Meerut blue drum case

கடந்த 2025 ஆம் ஆண்டு பணி நிமித்தமாக லண்டன் சென்றுவிட்டு மார்ச் மாதம் தனது மனைவி மஸ்கன் பிறந்தநாளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அவருக்கு தெரிவிக்காமல் மார்ச் மாதம் சவுரவ் ராஜ்புட் வீடு திரும்பினார். ஆனால் அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

தனது மனைவி முஸ்கான் மற்றும் அவரது ஆண் நண்பர் சாஹில் ஆகிய இருவரும் தனிமையில் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பான மோதலில், சவுரவை முஸ்​கானும், சஹிலும் இணைந்து, சவுரவை கத்​தி​யால் குத்​திக் கொலை செய்தனர். பின்னர் உடலை பல பாகங்களாக வெட்டினர்.

உடல் பாகங்களை ப்ளூ கலர் டிரம்​மில் போட்டு சிமெண்ட் கான்​கிரீட் கலவையைக் கொட்​டி பூசினர். பின்​னர் டிரம்மை மறைத்து வைத்​து​விட்டு இமாச்சல பிரதேசத்​துக்கு தப்​பியோடினர். வீட்டில் இருந்து துர்நாற்றம் வரவே அக்கம் பக்கத்தினர், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் காவல்துறையினர் சவுரவ் ராஜ்புட் வீட்டை சோதனை செய்தனர். அப்போது ப்ளூ டிரம்மில் இருந்து சவுரவ் ராஜ்புட் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்​கில் மீரட் போலீ​சார் விசா​ரணை நடத்தி சஹில், முஸ்கானை கைது செய்தனர். இந்தச் சம்பவம் இந்தியாவையே உலுக்கியது.

இந்த வழக்கில் காவல்துறை சுமார் 1,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. 126 முறை நடந்த நீதி​மன்ற விசா​ரணை​யில் 22 சாட்​சிகள் விசா​ரிக்​கப்​பட்​டனர். விசா​ரணை முடிந்து செப்டம்பர் 30 ஆம் தேதி மீரட் மாவட்ட நீதிபதி அர்​விந்த் குமார் மிஸ்ரா தீர்ப்பு வழங்​கி​னார். கணவரை கொலை செய்​து, அதை மறைத்த வழக்​கில் அவரது மனைவி முஸ்​கான், ​காதலர் சஹில் ஆகியோர் குற்​ற​வாளி​கள் என நீதி​மன்​றம் தீர்ப்பளித்தது.

இவர்​களுக்​கான தண்​டனை விவரம் பின்​னர் அறிவிக்​கப்​படும் என நீதிப​தி தெரிவித்​திருந்தார். அதன்படி இன்று குற்றவாளிகளுக்கான தண்டனை விவரத்தை நீதிமன்றம் அறிவித்தது. அதில், கடற்படை அதிகாரி சவுரவ் ராஜ்புட்டை கொன்ற அவரது மனைவி முஸ்கான் மற்றும் அவரது ஆண் நண்பர் சஹில் ஆகிய இருவருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் நடந்த 590 நாட்களில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளின்படி, இந்த மரண தண்டனையை அலகாபாத் உயர்நீதிமன்றம் உறுதி செய்யவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+