"ப்ளீஸ்..ப்பா.. வேணாம்".. மகள்கள் வைத்த உருக்கமான கோரிக்கை.. செவிசாய்த்த ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் மகள்கள் 2 கோரிக்கைகளை தன் அப்பாவிடம் வைத்துள்ளனர்
சென்னை: "ப்ளீஸ்..ப்பா.. வேணாம்" என்று நடிகர் ரஜினிகாந்த்தின் 2 மகள்களும் உருக்கமான கோரிக்கையை வைத்து வருகிறார்களாம்.. அதாவது இப்போது அரசியல் வேண்டாம் என்பதே இவர்களது ஒரே கோரிக்கை. இதை உடனடியாக ஏற்று தன் முடிவை மாற்றி கொண்டுள்ளார் ரஜினி. அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என்றும் அறிவித்து விட்டார்.
ரஜினிகாந்த் இந்த மாதம் 31-ம்தேதி கட்சி தொடர்பாக அறிவிக்க போகிறார்.. வரும் ஜனவரியில் அந்த கட்சியை தொடங்கவும் போகிறார்.. வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவும் போகிறார்.. இதை எதிர்நோக்கிதான் அவரது ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இந்நிலையில், கடந்த வாரம் 'அண்ணாத்த' ஷூட்டிங்கிற்கு ஹைதராபாத் சென்ற ரஜினிக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. ரத்த அழுத்தம் தொந்தரவு அவருக்கு இருக்கவும் உடனடியாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.. சிகிச்சையும் எடுத்து கொண்டார்..

டிஸ்சார்ஜ்
பிறகு டிஸ்சார்ஜ் ஆகும்போது, டாக்டர்கள் 3 அட்வைஸ்களை தந்தனர்.. முழுமையான ஓய்வில் இருக்க வேண்டும், மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், கொரோனா தொற்று ஏற்படக்கூடிய சூழல்களை உருவாக்கிக் கொள்ளக் கூடாது என்பதுதான் அந்த அட்வைஸ்கள்... டாக்டர்கள் இப்படி சொல்லிவிடவும், ரஜினியால் கட்சியை துவங்க முடியாமல் போய்விடுமோ என்ற சந்தேகம் எழுந்தது.. அதேசமயம், ரஜினியின் உடல் நிலை குறித்த தகவல்களால் ரசிகர்கள் கவலையும் அடைந்தனர்.

குஷி
ஆனால், திட்டமிட்டபடி வரும் 31-ம் தேதி பற்றின அறிவிப்பு வெளியாகும் என்று ரஜினி தரப்பில் இருந்து சொல்லப்பட்டது.. கட்சி பணிகளுக்கான வேலைகளையும் முடுக்கி விடப்பட்டது.. இது ரசிகர்களுக்கு ஏக குஷியை தந்தது. அதனால், புது கட்சியை எதிர்நோக்கி அவர்களும் காத்திருந்தனர்.

மகள்கள்
இந்நிலையில், மற்றொரு தகவல் கசிந்தது.. ரஜினிகாந்தின் இரண்டு மகள்களும் அவரிடம் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளனராம்.. அதன்படி, உடல்நிலைதான் முக்கியம், இப்போதைக்கு அரசியல் வேண்டாம் என்று தன் அப்பாவிடம் கெஞ்சி கேட்டுக் கொண்டனர்.

வேண்டுகோள்
"ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளதால் தொற்று ஈஸியாக பரவிவிடும்.. அப்படி பரவிவிட்டால் பெரிய ஆபத்தை தந்துவிடும்.. இந்த சமயத்தில், அரசியல் குறித்து அதிகமாக யோசிப்பதால் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்படும்.. அதனால் இப்போதைக்கு அரசியல் வேண்டாமே, கட்சிப்பணிகளுக்காககூட வெளியே எங்கேயும் போக வேண்டாம்..ப்பா என்று உருக்கமான கோரிக்கைகளை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கோரிக்கைக்கு ரஜினி செவிசாய்த்துவிட்டார்.. ஆம்.. கட்சியை தொடங்க போவதிலை என்று அறிவித்தும் விட்டார். இறுதியில் மகள்களின் அன்பு கோரிக்கை வென்றுவிட்டது.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications