சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராத்திரி நேரத்தில் திடீரென.. ரஜினியை சந்தித்து பேசிய அர்ஜுன மூர்த்தி.. என்னவா இருக்கும்?.. "அது"வா?

ரஜினியை அர்ஜுன மூர்த்தி, தமிழருவி மணியன் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர்

Google Oneindia Tamil News

சென்னை: ராத்திரியோடு ராத்திரியாக ரஜினியை நேரில் சந்தித்து பேசியிருக்கிறர்கள் ரஜினி மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி மற்றும் மேற்பார்வையாளர் தமிழருவி மணியனும்.. என்னவா இருக்கும்???

ரஜினிகாந்த்துக்கு உடம்பு சரியில்லை.. இப்போதுதான் டிஸ்சார்ஜ் ஆகி வந்துள்ளார்.. ஒரு வார காலத்துக்கு வீட்டில் முழு ஓய்வில் இருக்கவேண்டும்.. மன அழுத்தத்தை தவிர்க்கவேண்டும்... கொரோனா தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் எந்த நடவடிக்கையையும் தவிர்க்கவேண்டும் என்று 3 கண்டிஷன்களை டாக்டர்கள் போட்டுள்ளனர்.

அதனால், ரஜினி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.. டாக்டர்கள் சொல்லியதை வைத்து பார்க்கும்போது, ரஜினி கட்சி ஆரம்பிக்க போகிறாரா இல்லையா? 31-ம் தேதி அந்த அறிவிப்பை நமக்கு சொல்ல போகிறாரா இல்லையா என்ற சந்தேகம் எழுந்து கொண்டே இருக்கிறது..

 அறிவிப்பு

அறிவிப்பு

மற்றொரு பக்கம், திட்டமிட்டபடி ரஜினி கட்சியை ஆரம்பிப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று ராத்திரி அர்ஜுன மூர்த்தி, தமிழருவி மணியனும் ரஜினியை போயஸ் கார்டன் வீட்டில் சந்தித்து பேசியிருக்கின்றனர்.. இதுதான் பரபரப்பை ஏற்டுத்தி வருகிறது.. எதற்காக இந்த திடீர் சந்திப்பு என்று உறுதியாக தெரியவில்லை..

 பூத் கமிட்டி

பூத் கமிட்டி

ஆனால், ரஜினியின் உடல்நிலை குறித்து இருவருமே கேட்டறிந்ததாக சொல்லப்படுகிறது.. மேலும் கட்சி ஆரம்பிப்பது குறித்தும் ஆலோசித்துள்ளதாக தெரிகிறது.. 70 சதவிகிதம் நிறைவு பெற்றுள்ள பூத் கமிட்டி பணிகள் தொடர்பாகவும் ரஜினியிடம் 2 பேரும் தெரிவித்தார்களாம்.. மேலும், திட்டமிட்டபடி டிசம்பர் 31ம் தேதி கட்சியின் அறிவிப்பை வெளியிடுவது குறித்தும் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அட்வைஸ்

அட்வைஸ்

அதேசமயம், டாக்டர்கள் சொன்ன அறிவுரை, ரஜினியின் உடல்நிலை, அவரது குடும்பத்தாரின் உருக்கமான வேண்டுகோள், இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, கட்சியை இப்போதைக்கு ஆரம்பிக்க வேண்டாம், தள்ளி போடலாம் என்று சொல்லி இருப்பார்களோ என்றும் தோன்றுகிறது.. காரணம், ரஜினியின் உடல்நிலை அனைவருக்குமே முக்கியம் என்பதால்தான்.

 ட்விட்டர்

ட்விட்டர்

தன் கட்சி குறித்து அறிவிப்பதற்கு இன்னும் 2 நாள்தான் இருக்கிறது என்றாலும், வழக்கம்போல இந்த விஷயத்திலும் ரஜினி முடிவு சஸ்பென்ஸ் ஆகவே நீடித்து வருகிறது.. ஆனால், கட்சியை ரஜினி ஆரம்பிப்பது உறுதியானால், நிச்சயம், அந்த அறிவிப்பை, இருந்த இடத்தில் இருந்தே, அதாவது ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியா வாயிலாகவே அறிவிப்பார் என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் உறுதிபட சொல்கிறார்கள்.

சஸ்பென்ஸ்

சஸ்பென்ஸ்

"ரஜினி எது பேசினாலும், எதை செய்தாலும், அது உலகளவில் டிரெண்டிங் ஆகிவிடும்.. கட்சி அறிவிப்பை ஏற்கனவே, அவர் திட்டமிட்டு விட்டார்... சொன்னபடி, 31ம் தேதி, கட்சி குறித்த அறிவிப்பை ஆன்லைன் வழியே வெளியிடுவார்... எல்லாவற்றையும்விட விட அவரது உடல் நலன் எங்களுக்கு முக்கியம்... அதற்கேற்ப அவர் செயல்படுவார்.. அவருக்கு பக்கபலமாக நாங்க இருப்போம்" என்கின்றனர். ஆக மொத்தம், வழக்கம்போல நிலவிவரும் இந்த குழப்பத்துக்கும், டென்ஷனுக்கும் ரஜினியே வந்து முற்றுப்புள்ளி வைத்தால்தான் உண்டு!

English summary
Rajinikanth executives meeting with him about the new party
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X