ரஜினிகாந்த் இ பாஸ் வாங்கித்தான் கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்குப் போனார் - சென்னை மாநகராட்சி ஆணையர்

நடிகர் ரஜினிகாந்த் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்திற்கு முறையான இ பாஸ் வாங்கித்தான் போயிருக்கிறார் எ

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்திற்கு முறையான இ பாஸ் வாங்கித்தான் போயிருக்கிறார் என்று கிரேட்டர் சென்னை மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ் கூறியுள்ளார், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் ரஜினிகாந்த் இ பாஸ் வாங்கியிருப்பதாக கூறியுள்ளார் ஆணையர் பிரகாஷ்.

ரஜினிகாந்த் கடந்த வாரம் மாஸ்க் அணிந்து காரில் செல்லும் போட்டோ வெளியானது. கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் ரஜினிகாந்த் அவ்வப்போது வாக்கிங் போகும் வீடியோவும் வைரலானது. கேளம்பாக்கம் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கிறது. இப்போது ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு போக இ பாஸ் வாங்க வேண்டும். ரஜினிகாந்த் முறையான இ பாஸ் வாங்கினாரா என்ற கேள்வி எழுந்தது.

Rajinikanth gets E pass says Chennai Corporation Commissioner

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள், ரஜினிகாந்த் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்திற்கு முறையான அனுமதி பெற்று சென்றாரா? என்று கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த ஆணையர் பிரகாஷ், நடிகர் ரஜினிகாந்த் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்திற்கு இ பாஸ் வாங்கி போனாரா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று கூறினார். இந்த சர்ச்சை சில நாட்கள் நீடித்தது.

இதனிடையே கடந்த 20ஆம் தேதி ஆடி அமாவாசை நாளில் ரஜினிகாந்த் கேளம்பாக்கம் சென்றார். ஆனால் அவர் இ பாஸ் 23 ஆம் தேதி பெற்றதாக தகவல் வெளியானது. அந்த இ-பாஸில் மருத்துவ காரணங்களுக்காக செல்வதாகவும், கார் ஓட்டுநர் உடன் இன்னோவா காரில் பயணிப்பதாகவும் தகவல் இடம் பெற்றுள்ளது. அவருக்கு இ-பாஸ் வழங்கப்பட்ட தேதியாக ஜூலை 22ஆம் தேதியும், பயண தேதியாக ஜூலை 23ஆம் தேதியும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுவும் சர்ச்சையானது.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், நடிகர் ரஜினிகாந்த் உரிய முறையில் அனுமதி பெற்றுத்தான் கேளம்பாக்கம் சென்றுள்ளார் என்று கூறினார். செங்கல்பட்டு ஆட்சியரிடம் ரஜினிகாந்த் இ-பாஸ் பெற்றது ஆய்வில் தெரியவந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் அதைப்பற்றி எந்த ஆவணங்களும் வெளியாகவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+