செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா! ரஜினிகாந்தை உற்சாகமடைய வைத்த 'ஒருவன் ஒருவன் முதலாளி' பாடல் பிஜிஎம்!
சென்னை: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவில் 'ஒருவன் ஒருவன் முதலாளி' பாடல் பிஜிஎம் ஒலிக்கவிடப்பட்டதால் நடிகர் ரஜினிகாந்த் உற்சாகமடைந்தார்.
Recommended Video
பல்வேறு நாடுகளின் கொடி அணி வகுப்பு நிகழ்வின் போத பி.ஜி.எம்.கள் மாற்றி மாற்றி ஒலிக்க விடப்பட்டன.
தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவுடன் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த் அங்கு நடைபெற்ற ஒவ்வொரு நிகழ்வையும் மிகவும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்.

செஸ் ஒலிம்பியாட்
சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் இன்று மாலை பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் தலைமை தாங்கிய நிலையில் சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர்.

நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவுடன் வந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆரம்பத்தில் மிகவும் இறுக்கமாக காணப்பட்ட அவர், செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்ற நாடுகளின் கொடி அணிவகுப்பு நிகழ்வின் போது மட்டும் சற்று உற்சாகமாக காணப்பட்டார். அதற்கு காரணம் தாம் நடித்த முத்து திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஒருவன் ஒருவன் முதலாளி' பாடல் பிஜிஎம் ஒலிக்கவிடப்பட்டதே ஆகும்.

உதயநிதி -வைரமுத்து
செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் நடைபெற்ற அனைத்து கலை நிகழ்ச்சிகளையும் மிகவும் உன்னிப்பாக கவனித்த ரஜினிகாந்த், உதயநிதி ஸ்டாலின், வைரமுத்து உள்ளிட்ட ஒரு சிலரை மட்டும் பார்த்து புன்னகைத்தார். மற்றபடி முகத்தில் பெரியளவில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதவராக அமர்ந்திருந்தார் ரஜினிகாந்த்.

நிம்மதி சந்தோஷம்
அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரஜினி, சந்தோஷமும் நிம்மதியும் தனக்கு இல்லை எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனை மெய்ப்பிக்கும் விதமாகவே அவரது செயல்பாடுகளை காண முடிகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications