கடிவாளம் போடாமல் ஆடவிட்ட விஜய்.. ரஜினிகாந்த் வைத்த ஆப்பு.. சிக்கலில் கோர்த்துவிட்ட ஆதவ் அர்ஜுனா!
சென்னை: காலம் காத்திருந்து பதில் சொல்லும் என்ற நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை, விஜய்க்கு எதிராக திரும்பி இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதற்கு ஆதவ் அர்ஜுனா அரசியல் நாகரீகமின்றி மேடைகளில் பேசிய போதே, விஜய் கடிவாளம் போடாமல் வேடிக்கை பார்த்ததே காரணமாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
திமுக குடும்பம் மிரட்டல் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் விலகி விட்டதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசி இருந்தார். ரஜினிகாந்திற்கு இல்லாத மனவலிமை விஜய்க்கு உள்ளதாக கூறிய ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு சர்ச்சையாகியது. இதற்கு முன்பாகவே ஆதவ் அர்ஜுனா பல மேடைகளில் அரசியல் நாகரீகமின்றி பேசி இருக்கிறார்.

குறிப்பாக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட பலரையும் விஜய் மேடையில் இருக்கும்போதே மோசமாக விமர்சித்துள்ளார். அந்த வகையில் விஜய்யின் பெருமையை பேச ரஜினிகாந்த்தை ஒப்பிட்டு ஆதவ் அர்ஜுனா பேசியது கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இதற்கு எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ரகுபதி, திருமாவளவன், எல்.முருகன், அண்ணாமலை மற்றும் பாஜக தலைவர்கள் என்று பலரும் கண்டனம் தெரிவித்தனர். அதேபோல் ரஜினிகாந்த் ரசிகர்களும் போஸ்டர் ஒட்டி கடுமையாக சாடி இருந்தனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ரஜினிகாந்த், தவெகவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தை கூறி இருந்தார். அந்த அவதூறு கருத்தை கண்டித்து எனக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். காலம் பேசாது.. ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் இது விஜய்க்கு மிகப்பெரிய பின்னடைவாகவும் அமைந்துள்ளது. விஜய் மேடையில் இருந்த போதே ஆதவ் அர்ஜுனா கடிவாளம் போட்டிருந்தால், இப்படியான சம்பவங்கள் அரங்கேறி இருக்காது என்றும் பலரும் விமர்சிக்க தொடங்கி இருக்கின்றனர்.
-
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பரிசு வேண்டாம்.. நோட்டு கொடுங்க.. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இறங்கிய தவெக அமைச்சர் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
திருச்சி கிழக்கில் வெல்லமண்டி நடராஜன் போட்டி? அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த க்ரீன் சிக்னல்! -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications