ரஜினி டிஸ்சார்ஜ்.. அப்பல்லோ ஒன்னு சொல்லுது.. அண்ணன் ஒன்னு சொல்றாரே.. எனிவே ரசிகர்கள் ஹேப்பி
சென்னை: ரஜினி டிஸ்சார்ஜ் எப்போது என்ற கேள்விக்கு இன்று மதியம்தான் எடுக்கப்படும் என அப்பல்லோ நிர்வாகம் கூறுகிறது, ஆனால் அண்ணன் சத்யநாராயணாவோ இன்று மாலை வீடு திரும்புவார் என்கிறார். எதுவாக இருந்தாலும் ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி ஆகிவிட்டார்கள்.
ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. இந்த படத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்து வந்தார்கள். இந்த நிலையில் படப்பிடிப்பு குழுவை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அந்த படக்குழுவில் பணியாற்றிய அனைவருக்கும் சோதனை செய்யப்பட்டதில் ரஜினிகாந்திற்கு அறிகுறியும் இல்லை, கொரோனாவும் இல்லை. எனினும் அவரது உடலின் ரத்த அழுத்தம் சீரற்ற தன்மையில் இருந்தது.

அப்பல்லோ மருத்துவமனை
இதனால் அவர் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவ குழுவினரின் முழு கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

மருத்துவமனை அறிக்கை
அவருக்கு ஓய்வு என்பது அவசியம் என்றும் அறிவுறுத்தியது. அவருக்கு நிறைய சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றின் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் ரஜினிகாந்திற்கு பயப்படும் படியாக ஒன்றும் இல்லை. இன்று மதியம் மருத்துவக் குழுவினர் ரஜினியை ஆய்வு செய்துவிட்டு டிஸ்சார்ஜ் குறித்து முடிவெடுப்பதாக மருத்துவமனை அறிக்கை தெரிவித்துள்ளது.

ரசிகர்கள் அச்சம்
நேற்றே ரஜினியின் டிஸ்சார்ஜ் குறித்து முடிவெடுப்பதாக கூறிய நிலையில் அது தாமதமானதால் ரசிகர்கள் அச்சமடைந்தனர். ஆனால் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா அவரது டிஸ்சார்ஜ் குறித்து பேட்டி அளித்துள்ளார். அதை கேட்ட ரசிகர்கள் செம குஷியாகிவிட்டனர்.

ரசிகர்கள் மகிழ்ச்சி
சத்யநாராயணா கூறுகையில் இன்று மாலையோ அல்லது நாளை காலையோ ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். திட்டமிட்டபடி ஆலோசனை செய்து அரசியல் கட்சியை ரஜினிகாந்த் தொடங்குவார் என தெரிவித்துள்ளார். அரசியல் கட்சி குறித்து சத்யநாராயணா கூறியதை கேட்ட ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications