#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்.. புதிய புதிய ஹேஷ்டேக்குகளை வெளியிட்ட ரஜினி
சென்னை: டிசம்பர் 31-ஆம் தேதி கட்சி தொடங்குவது குறித்து அறிவிப்பதாக ரஜினி வெளியிட்ட ட்வீட்டில் #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் என ஹேஷ்டேக் டிரென்டிங்கில் உள்ளது.
ரஜினிகாந்த் கடந்த 2017-ஆம் ஆண்டு அரசியல் கட்சி தொடங்குவது குறித்து அறிவித்திருந்தார். ஆனால் இந்த 3 ஆண்டுகளில் அவர் எதையும் செய்யவில்லை. இந்த நிலையில் அவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது ரஜினிகாந்த், தனது உடல்நிலை குறித்து நிர்வாகிகளிடம் கவலைப்பட்டதாக தெரிகிறது. ஆனால் அன்றைய தினம் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியை ரஜினி சொல்லவில்லை.

எதிர்பார்ப்பு
இதனால் ரசிகர்கள் சோர்ந்து போயினர், பலர் தூக்கமில்லாமல் இருந்தனர். ஆனால் அரசியல் வருகை குறித்து வெகு விரைவில் அறிவிப்பேன் என ரஜினி கூறியிருந்தார். இதனால் கடந்த இரு நாட்களாக ரஜினியின் அறிக்கை குறித்து எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கொடுக்கவில்லை.

ரசிகர்கள்
அரசியலுக்கு வருவதாக இருந்தால் அவர் ரசிகர்கள் முன்பே மாஸாக அறிவித்திருப்பாரே. தற்போது அறிக்கை வெளியிடுவதாக ரஜினி கூறியதால் அரசியலுக்கு வராதது குறித்தே அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைய தினம் ரஜினி ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசையே கொடுத்துவிட்டார்.

உருவாக்குவது நிச்சயம்
ஜனவரி மாதம் அரசியல் கட்சியை தொடங்குவதாக ரஜினி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், வரப்போகிற சட்டசபை தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாக்குவது நிச்சயம் என தெரிவித்துள்ளார்.

அதிசயம்
மேலும் அற்புதம், அதிசயம், நிகழும் என்றும் தெரிவித்துள்ளார். தனது ட்வீட்டில் #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் என்ற ஹேஷ்டேக்கையும் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல என்ற ஹேஷ்டேக்கையும் அவர் வெளியிட்டுள்ளார். இது தற்போது டிரென்டிங்கில் உள்ளது.
-
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்!












Click it and Unblock the Notifications