சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சரியா போச்சு போங்க.. மோடியின் அடிப்படை கொள்கையிலேயே கை வைத்த ரஜினிகாந்த்!

Google Oneindia Tamil News

Recommended Video

    யாரையும் பகைச்சுக்காம நாகரீகமாக ரஜினி பேட்டி-வீடியோ

    சென்னை: 'காங்கிரஸ் இல்லா பாரதம்' என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கு எதிராக வலுவான கருத்தை முன்வைத்துள்ளார் ரஜினிகாந்த்.

    2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது பாஜகவும், அதன் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடியும், முன்வைத்த முக்கியமான கோஷம் என்பது காங்கிரஸ் முக்த் பாரத்.

    அதாவது, காங்கிரஸ் இல்லாத இந்தியா அமைக்க வேண்டும் என்று மக்களுக்கு விடுத்த அழைப்பு தான் அந்த கோஷம்.

    நீங்க நிரூப்பிக்கணும்.. இதை பண்ணுங்க ராகுல் காந்தி.. ரஜினிகாந்த் சொல்லும் அதிரடி அட்வைஸ்! நீங்க நிரூப்பிக்கணும்.. இதை பண்ணுங்க ராகுல் காந்தி.. ரஜினிகாந்த் சொல்லும் அதிரடி அட்வைஸ்!

    திடீர் பேட்டி

    திடீர் பேட்டி

    ஆனால் பாஜக தலைவர்களுடன் நட்பாக இருப்பதாக கூறப்படும் ரஜினிகாந்தோ, அந்த கோஷத்துக்கு எதிரான ஒரு கருத்தை முன்வைத்துள்ளார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில், இன்று மதியம் நிருபர்களை சந்தித்த ரஜினிகாந்த், காங்கிரஸ் கட்சி அடைந்த படு தோல்வி குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதை பாருங்கள்.

    ஒத்துழைப்பு இல்லை

    ஒத்துழைப்பு இல்லை

    ராகுல் காந்திக்கு தலைமை பண்பு இல்லை என்று நான் கூற மாட்டேன். காங்கிரஸ் கட்சி என்பது மிகவும் வயது மூத்த ஒரு கட்சி. மிகவும் மூத்த தலைவர்கள் எல்லாம் அங்கே உள்ளனர். ஒரு இளைஞராக ராகுல் காந்திக்கு சீனியர் தலைவர்களை கையாளுவது என்பது சிரமமாகத் தான் இருக்கும். எனது கணிப்பின்படி காங்கிரசின் மூத்த தலைவர்கள் இந்த தேர்தலில் கடினமாக பணியாற்றவில்லை. தலைமைக்கு சரியாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றே கருதுகிறேன்.

    வலிமை தேவை

    வலிமை தேவை

    ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்ய கூடாது. அவர் இன்னும் உறுதியாக இருக்கவேண்டும். தன்னால் முடியும் என்பதை அவர் நிரூபித்துக்காட்ட வேண்டும். ஜனநாயகத்தில் ஆளும் கட்சியை போலவே எதிர்க்கட்சியும் முக்கியத்துவமானது. எதிர்க்கட்சிகளும் மிகவும் வலிமையாக இருக்க வேண்டும். தற்போது ஆளும் கட்சி, மிகவும் வலிமையாக உள்ளது. அதேபோன்று எதிர்க்கட்சியும் வலிமையாக மாறும் என்று நான் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

    மோடிக்கு எதிரான கொள்கை

    மோடிக்கு எதிரான கொள்கை

    பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாக வேண்டும் என்பது மோடியின் கோஷமாக இருக்கும் நிலையில், எதிர்க்கட்சி, ஆளும் கட்சியை போல வலுவானதாக இருக்க வேண்டும் என்ற ஜனநாயகத்தின் அடிப்படையை, ரஜினிகாந்த் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

    English summary
    Actor Rajinikanth says Rahul Gandhi should not resign his post from the Congress, and in democracy opposition parties also important as like us ruling party, he added.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X