ரஜினிகாந்த் தலைமையில் நாளை மக்கள் மன்றத்தின் மா.செ.க்கள் கூட்டம்.. வழக்கம் போல கூடி கலையும்?
சென்னை: ரஜினிகாந்தின் மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை சென்னையில் நடைபெற உள்ளது. இதில் அரசியல் கட்சி தொடக்க விழா குறித்து ஆலோசிக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்கப் போவதாக அறிவித்தே 2 ஆண்டுகளாகிவிட்டன. ஆனால் அதற்கான எந்த ஒரு சமிக்ஞையும் தென்படவில்லை.

ஆனால் போயஸ் கார்டனில் தமது வீட்டின் முன்புறம் நடுத்தெருவில் நின்று செய்தியாளர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் ரஜினிகாந்த். அப்படி செய்தியாளர்கள் சந்திப்பிலும் திட்டவட்டமான தெளிவான எந்த ஒரு கருத்தையும் வெளிப்படுத்தாமல் பட்டும் படாமல் பூடகமான கருத்துகளையே ரஜினிகாந்த் கூறி வருகிறார்.
இதனால் ரஜினிகாந்தின் ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பும் சர்ச்சைக்குரியதாகவும் விவாதத்துக்குரியதாகவும் மாறி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் ரஜினிகாந்த் தலைமையில் அவரது மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை முதல் 2 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பில் முதல் கட்டம் நிறைவடைந்துள்ளது. இந்த இடைவேளையில் மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ரஜினிகாந்த் கூட்டியுள்ளார்.
இதில் அரசியல் கட்சி தொடக்க விழா குறித்து ரஜினிகாந்த் ஆலோசிக்கலாம் என ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. அதேநேரத்தில் அண்ணாத்த படத்துக்காக ரசிகர்களை தக்க வைக்க இத்தகைய கூட்டத்தை கூட்டியுள்ளார் ரஜினிகாந்த் என்கிற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications