அரசியல் நிலைப்பாடு குறித்து இன்று மாலை அல்லது நாளை ரஜினிகாந்த் அறிவிப்பார்- மக்கள் மன்ற நிர்வாகி
சென்னை: அரசியல் நிலைப்பாடு குறித்து இன்று மாலை அல்லது நாளை ரஜினிகாந்த் ஊடகங்கள் மூலமாக அறிவிப்பார் என்று அவருடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் மன்ற நிர்வாகி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று காலையில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். சுமார் 2 மணிநேரம் இந்த ஆலோசனை நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், மக்கள் மன்ற நிர்வாகிகள் பலரது செயல்பாடுகள் தொடர்பாக ரஜினி அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் அரசியல் தொடர்பாக தாம் முடிவு எடுத்து அறிவிக்கும் வரை பொறுத்திருங்கள் என்றும் ரஜினிகாந்த் கூறியதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
ரஜினிகாந்துடனான ஆலோசனை கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் மன்ற நிர்வாகி, எங்களுடைய கருத்துகள் அனைத்தையும் ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டார். இப்போதைய சூழ்நிலையில் அரசியலுக்கு ரஜினிகாந்த் வரவேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி இருக்கிறோம்.

ரஜினிகாந்த் தமது அரசியல் நிலைப்பாடு தொடர்பாக இன்று மாலை அல்லது நாளை செய்தியாளர்கள் மூலமாக அறிவிப்பார். அந்த முடிவு நல்ல முடிவாகவே இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் . ரஜினிகாந்த் எந்த முடிவு எடுத்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications