சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திடீர் பரபரப்பு.. ரஜினி ஏதோ முக்கிய அறிவிப்பு வெளியிட போகிறாராமே... காரணம் "அவர்"தானா..?

Google Oneindia Tamil News

சென்னை: "என்னாது, மறுபடியும் ரஜினியா".. என்ற கேள்வி மொத்த சோஷியல் மீடியா முழுவதும் தீயாய் பரவி வருகிறது.. ஏதோ முக்கிய அறிவிப்பை வெளியிட போகிறாராம்.

ரஜினிகாந்த்துக்கு உடம்பு சரியில்லை.. அதனால் அரசியலுக்கு வர போவதில்லை என்று சொல்லி ஒதுங்கி கொண்டார்.. இதனால் ரசிகர்களோ அதிர்ச்சி அடைந்தனர்..

ஆனால், ரஜினியை வைத்து மிச்ச எதிர்காலத்தையும் ஓட்டிவிடலாம் என்று நம்பி கொண்டிருந்தவர்கள் தலையில் இடியே விழுந்துவிட்டது.

 ரஜினி

ரஜினி

அரசியலுக்கு வரவில்லை என்றதுமே பலர் முந்தி கொண்டு வந்து ரஜினிக்கு வாழ்த்து சொன்னார்கள்.. உடல்நிலையை பத்திரமாக பார்த்து கொள்ளும்படி பாச மழை பொழிந்தார்கள்.. அப்படியே தங்களுக்கு மட்டும் வாய்ஸ் தந்துவிடும்படி கொக்கி போட்டார்கள். இதில் கம்யூனிஸ்ட் காம்ரேடுகளும் ரஜினி ஆதரவை கேட்டது வியப்பின் உச்சம்தான்.

 எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இதனால் இந்த முறை தேர்தலில் ரஜினி யாருக்கு வாய்ஸ் தருவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தபடியே இருந்தது.. ஆனால், அதையும் ஒத்த அறிக்கை வெளியிட்டு பொசுக்கென நொறுக்கிவிட்டது ரஜினி தரப்பு.. யாருக்கும் வாய்ஸ் இல்லை என்று சொல்லியாகிவிட்டது... இந்த விஷயத்திலும் பெருத்த அதிர்ச்சி கட்சிகளுக்கு ஏற்பட்டது.

சந்திப்பு

சந்திப்பு

இப்படிப்பட்ட சூழலில்தான் ஒரு தகவல் பரபரத்து வருகிறது.. வரும் 26-ம் தேதி மன்றத்து நிர்வாகிகளை சந்திக்க போகிறாராம்.. அத்துடன் செய்தியாளர்களையும் சந்திக்க போகிறாராம்.. இதுதான் அரசியல் களத்தில் குழப்பம் கலந்த விறுவிறுப்பை கூட்டி வருகிறது.. தேர்தலுக்கு நாட்கள் நெருங்கி வரும் நிலையில், ரஜினி எதற்காக செய்தியாளர்களை சந்திக்க போகிறார்.

தகவல்கள்

தகவல்கள்

அரசியலுக்கு வரபோவதில்லை என்ற பெருத்த முடிவையே ட்வீட் போட்டு வெளிப்படுத்தியவர், இப்போது என்ன முடிவு எடுக்க போகிறார்? அவருக்கு உடம்பு சரியில்லை என்பதால் வெளிநாடு செல்வதாக ஒரு பிளான் இருப்பதாக சொல்லப்பட்டது.. மேல்சிகிச்சை முடித்து கொண்டு வந்து ஷூட்டிங்கை தொடர்வதாகவும் தகவல்கள் கசிந்தன.

 அர்ஜுன மூர்த்தி

அர்ஜுன மூர்த்தி

இன்னொரு பக்கம், அர்ஜுன மூர்த்தி சொந்தமாக ஒரு கட்சியை ஆரம்பிக்க போகிறார்.. ரஜினியின் ஆதரவை பகிரங்கமாக நாடியும், அதிலும் ரஜினி மூலம் நோஸ்கட் கிடைத்துவிட்டது.. எனினும், ஒருசில நாட்களில் அர்ஜுன மூர்த்தி கட்சி ஆரம்பிக்கும் தகவல் வெளிவந்தபடியே இருப்பதால், ரஜினி அதுகுறித்த ஏதாவது ஒரு அறிவிப்பை வெளியிடுவாரா என்று தெரியவில்லை.

கமல்

கமல்

இது எல்லாவற்றிற்கும் மேலாக, கமல் ரஜினியை சென்று நேரில் சந்தித்து பேசி உள்ளார்.. ரஜினியிடம் முதல்முறையாக வாய்விட்டு ஆதரவு கேட்டது கமல்தான்.. ஆனால், அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்ட நிலையில் ரஜினியை சந்தித்து பேசினார் கமல்.. இது காலம் தாழ்ந்த ஒரு சந்திப்பு.. ஆனால் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை.. இருவரும் பரஸ்பரம் உடல்நலம் விசாரித்ததாக கூறப்பட்டது... அரசியல் குறித்த விஷயங்கள் பேசவில்லை என்று கமல் சொன்னாலும், மக்கள் மனம் அதை ஏற்க மறுக்கிறது.

 நிர்வாகிகள்

நிர்வாகிகள்

இப்படிப்பட்ட சூழலில்தான் 26ம் தேதி, மன்ற நிர்வாகிகளையும், அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களையும் சந்திக்க, ரஜினி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.. இதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றனவாம்.. தேர்தல் நடந்து முடிந்துவிட்டால் பரவாயில்லை.. ஆனால், தேர்தல் தேதி நெருங்கும் நேரத்தில், ரஜினியின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை கிளப்பி விட்டு கொண்டிருக்கிறது.. என்னவா இருக்கும்.. பார்ப்போம்..!

English summary
Rajinikanth will meet Press on 26th, sources say
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X