Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

10+ மரணம்.. குமரி மருத்துவக் கல்லூரியில் “மர்ம முடிச்சுகள்” - த்ரில்லர் படங்களை மிஞ்சும் திகில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குமரி மருத்துவ மாணவி தற்கொலை வழக்கில் குற்றவாளிகளை காப்பாற்ற சதி நடப்பதாகவும், இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தேவை எனவும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டு உள்ளதாவது, "கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அதிர்ச்சியூட்டும் பல உண்மைகள் வெளியாகியுள்ளன. மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் யார் என்பது தெளிவாக தெரியும் நிலையில், அவர்களைக் காப்பாற்ற காவல்துறை அதிகாரிகளே துணை போவது கண்டிக்கத்தக்கது.

Ramadass demand proper investigation for Kanyakumari medical students suicide

குலசேகரத்தில் உள்ள மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மயக்கவியல் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த, தூத்துக்குடி நகரத்தைச் சேர்ந்த மாணவி சுர்ஜிதா கடந்த 6 ஆம் தேதி ஐயத்திற்கிடமான வகையில் அவரது அறையில் ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதை மூடி மறைப்பதற்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் முயற்சிகள் நடைபெற்ற நிலையில், தமது தற்கொலைக்கு காரணமானவர்கள் மூவர் குறித்து மாணவி சுர்ஜிதா எழுதி வைத்த தற்கொலைக் கடிதம் வெளியானதையடுத்து அதுகுறித்த விவரங்கள் தெரியவந்தன.

இவ்வளவுக்குப் பிறகும் மாணவியின் தற்கொலைக்கு காரணமான மருத்துவக் கல்லூரி பேராசிரியர், சக மாணவி, மாணவர் ஆகிய மூவர் மீதும் வழக்கு மட்டும் தான் பதிவு செய்யப்பட்டுள்ளதே தவிர ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல், காப்பாற்ற விசாரணை அதிகாரி ஜானகியும், உயரதிகாரிகளும் முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பேராசிரியர் உள்ளிட்ட மூவரும் மாணவி சுர்ஜிதாவை தற்கொலைக்கு தூண்டியதாக இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 306 இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்தப் பிரிவின் கீழ் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், அதிக அளவாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். இது பிணையில் வெளிவரமுடியாத குற்றப்பிரிவு ஆகும். இந்த பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்களை காவல்துறை இதுவரை கைது செய்யவில்லை. இவை அனைத்துக்கும் மேலாக இந்த வழக்கில் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சேர்க்கப்படவில்லை. அதனால், இந்த வழக்கு நியாயமாக நடக்குமா? என்ற ஐயம் எழுந்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் குலசேகரம் காவல்நிலைய ஆய்வாளர் ஜானகியின் நேர்மை குறித்து பல்வேறு ஐயங்கள் எழுப்பப்படுகின்றன.

இந்த வழக்கு குறித்த விவரங்களை மூடி மறைக்க முயலும் அவர், ''இன்னும் எத்தனை நாளைக்கு இது குறித்து செய்தி வெளியிடுவீர்கள். வேறு பரபரப்பான செய்தி கிடைக்கும் வரை தானே. அதன் பிறகு இந்த வழக்கை பார்த்துக் கொள்கிறோம்'' என்று செய்தியாளர்களிடமே கூறியதாக ஊடக வட்டாரங்களில் கூறப்படுகிறது. முழுக்க, முழுக்க தனியார் மருத்துவக் கல்லூரிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை இந்த வழக்கை விசாரித்தால் நீதி கிடைக்காது; குற்றவாளிகள் தப்பி விடுவார்கள் என்பது உறுதியாகும்.

சர்ச்சைக்குரிய மருத்துவக் கல்லூரியில் மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது இது முதல் முறையல்ல. ஒரு பரபரப்பான திரைப்படம் தயாரிக்கும் அளவுக்கு அங்கு குற்றங்களும், விதிமீறல்களும் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுவரை பத்துக்கும் மேற்பட்ட மருத்துவ மாணவிகள் அங்கு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் இளநிலை மருத்துவ மாணவ, மாணவியர் என்றும், அதனால் அவை குறித்த விவரங்கள் வெளியுலகிற்கு வரவில்லை என்றும் தெரிகிறது. சுர்ஜிதா முதுநிலை மருத்துவ மாணவி என்பதாலும், தமது தற்கொலை கடிதத்தை அவரே பலருக்கு அனுப்பியதாலும் தான் இந்த செய்தி வெளியுலகிற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

மாணவ, மாணவியரின் தற்கொலைக்கு மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட பலவகையாக கொடுமைகளே காரணமாகும். கல்லூரியில் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் கேட்டும், தகுதியின் அடிப்படையில் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் மாணவர் சேர்க்கைக்குப் பிறகு கட்டணம் வசூலிக்க முடியாது என்பதால், அவர்கள் செய்யும் சிறிய தவறுகளைக் கூட பெரிதாக்கி பல்லாயிரக்கணக்கில் தண்டம் விதித்தும் கொடுமைப்படுத்தபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன.

பேராசிரியர், 2 மாணவர்கள்..பிரபல தனியார் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை விவகாரத்தில் திருப்பம்

மருத்துவக் கல்லூரிக்கு எதிராக மாணவர்களோ, பெற்றோர்களோ புகார் கொடுத்தால் அதன் நகலை கல்லூரி நிர்வாகத்திற்கே அனுப்பி வைக்கும் அளவுக்கு அதனுடன் குலசேகரம் காவல்நிலையம் நெருக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது. முதுநிலை மருத்துவ மாணவி சுர்ஜிதாவின் தற்கொலை மட்டுமின்றி, இதற்கு முன் தற்கொலை செய்து கொண்ட மாணவிகளின் குடும்பங்களுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும். அதற்காக, மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற கொடுமைகள் மற்றும் தற்கொலைகள் குறித்து, உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்." என்று கேட்டுக்கொண்டு உள்ளார்.

சொந்தக் காரணங்கள், மன அழுத்தத்தால் தற்கொலை எண்ணம் வந்தால் மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104; அல்லது சிநேகா உதவி எண் - 044-2464005 ஐ தொடர்புகொள்ளலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+