பேராசிரியர், 2 மாணவர்கள்..பிரபல தனியார் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை விவகாரத்தில் திருப்பம்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் தனியார் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கல்லூரி பேராசிரியர், 2 மாணவர்கள் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி வி.டி.சி. நகரைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் வியாபாரி ஆவார். இவருடைய மகள் சுகிர்தா . 27 வயதாகும் இவர் குமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியில் முதுநிலை மருத்துவம் 2-ம் ஆண்டு படித்து வந்திருக்கிறார்.

மருத்துவ மாணவி சுகிர்தா குலசேகரத்தில் உள்ள கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி தான் படித்து வந்தார். கடந்த அக்டோபர் 6ம் தேதி கல்லூரிக்கு செல்லவில்லை. விடுதியிலேயே இருந்திருக்கிறார். இந்நிலையில் மாணவி கல்லூரிக்கு வராத நிலையில் விடுதி அறையில் திடீரென இறந்து கிடந்திருக்கிறார். இதை பார்த்த சக மாணவிகள் உடனடியாக கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.
கல்லூரி நிர்வாகத்தினரும் உடனடியாக குலசேகரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து குலசேகரம் போலீசார் நேரில் வந்து மாணவி சுகிர்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது மேலும் மாணவியின் அறையில் போலீசார் சோதனை செய்த போது ஊசி மற்றும் மருந்து சிக்கி இருந்தது.
இதை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், தசையை தளர்வடைய செய்யும் மருந்தை ஊசி மூலம் தன்னுடைய உடலில் செலுத்தி சுகிர்தா தற்கொலை செய்திருந்தது தெரியவந்தது.
இதனிடையே து தற்கொலை செய்து கொண்ட மாணவி சுகிர்தா எழுதி வைத்த உருக்கமான கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினார்கள். தொடர்ந்து மாணவி தற்கொலை தொடர்பாக குலசேகரம் போலீசார் தீவிர நடத்தினர். இதனிடையே மாணவி எழுதிய அந்த கடிதத்தில் பேராசிரியர் பரமசிவம், முதுகலை 3-ம் ஆண்டு மாணவர்களான டாக்டர்கள் ஹரீஸ், பிரீத்தி ஆகியோர் உடல் மற்றும் மன ரீதியில் துன்புறுத்தியதாக எழுதி இருந்ததாக கூறப்படுகிறது.
இதை விசாரணையில் உறுதி செய்த போலீசார், கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பேராசிரியர் உள்பட 3 பேரும் மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக இந்திய குற்றவியல் சட்டம் 306 பிரிவின் கீழ் குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். மேலும் இந்த வழக்கு தொடர்பாக தக்கலை துணைபோலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன், குலசேகரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜானகி மற்றும் போலீசார் பிற மாணவ-மாணவிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே கன்னியமாகுரி மாவட்ட காவல்துறை இந்த விவகாரம் தொடர்பாக பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது: 'தனியார் மருத்துவக் கல்லூரியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் உரிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தவும், உண்மைகளை கண்டறியவும் ஒரு பெண் அதிகாரி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே இந்த சம்பவம் தொடர்பாக தகவல்களை யாரேனும் பகிர்ந்து கொள்ள விரும்பினால் 94981 95077 என்ற ெசல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறைசார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications