"தூங்கும்போது தலையணை வைத்து அமுக்குமாறு பதிவிட்டவருக்கு அன்புமணி பதவி கொடுத்தார்”: ராமதாஸ் காட்டம்
சென்னை: தூங்கும்போது தலையணை வைத்து அமுக்குமாறும், துண்டைப் போட்டு என் கழுத்தை இறுக்குமாறும், முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு கட்சியில் அன்புமணி பதவி வழங்கியுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தமிழ்க்குமரனை பாமக இளைஞர் சங்கத் தலைவராக நியமனம் செய்வதாக அறிவித்தார் ராமதாஸ். பாமக முன்னாள் தலைவரான ஜிகே மணியின் மகனான தமிழ்க்குமரனை இளைஞரணித் தலைவராக நியமிக்கும் கடிதத்தை, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகள் காந்திமதி ஆகியோர் அவரிடம் வழங்கினர்.

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், "தூங்கும்போது தலையணை வைத்து அமுக்குமாறும், துண்டைப் போட்டு என் கழுத்தை இறுக்குமாறும், முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு கட்சியில் பதவி வழங்கியுள்ளார் அன்புமணி. அவதூறான பதிவுகளை சமூக வலைதளத்தில் பரப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்" என அன்புமணி மீது ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
பாமக இளைஞரணி தலைவராக காந்திமதியின் மகன் முகுந்தன் நியமிக்கப்பட்ட போதுதான், ராமதாஸ், அன்புமணிக்கு இடையே பிரச்சனை வெடித்தது. முகுந்தன் கடந்த மே மாதம் இந்தப் பதவியில் இருந்து விலகினார். இப்போது பாமக இளைஞர் சங்கத் தலைவர் பதவி தமிழ்க்குமரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications