Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என் நிலைமைய பாத்தீங்களா? தைலாபுரம் பக்கம் தலை காட்டாத அடிபொடிகள்! புலம்பித் தவித்த அய்யா ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிட்டத்தட்ட தனது அரசியல் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். ஒரு காலத்தில் கூட்டணிக்காக அதிமுகவும் திமுகவும் தைலாபுரத்தின் கதவுகளை தட்டிய நிலையில், தற்போது அவரது ஆதரவாளர்களே அவரை சந்திக்காமல் தவிர்ப்பதாக சொல்லப்படுகிறது.கடந்த மாதம் வரை தைலாபுரத்தில் தவம் கிடந்த ஜிகே மணி,அருள் உள்ளிட்டோர் எதிர் முகாம்களில் தஞ்சம் புக தொடங்கி இருக்கின்றனர். என்னையே சுற்றி வந்தவர்கள் இன்று எஸ்கேப் ஆகிவிட்டார்கள் என தனது குடும்பத்தினரிடம் புலம்பி தள்ளிவிட்டாராம் ராமதாஸ்.

அதிமுக பாஜக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் இணைந்திருக்கும் நிலையில் பாமகவின் நிறுவனரான ராமதாஸ் திமுகவுடன் பேச்சு நடத்தினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியை காரணம் காட்டி ராமதாசை கூட்டணிக்குள் சேர்க்காத நிலையில் மீண்டும் அதிமுக கூட்டணி கதவை ராமதாஸ் தட்டியதாக சொல்லப்படுகிறது.

Ramadoss

இந்த நிலையில் ராமதாஸுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை என அன்புமணி தரப்பு தெள்ளத் தெளிவாக சொல்லி உள்ளது. இதை அடுத்து எந்த ரூபத்திலும் ராமதாஸ் தரப்புக்கு அதிமுக கூட்டணியில் இடமில்லை என திட்டவட்டமாக எடப்பாடி தரப்பு சொன்னதாக சொல்லப்படுகிறது.

பாமக உட்கட்சி மோதல்

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருந்தன. இதன் காரணமாக பாமக கட்சி இரண்டு அணிகளாக செயல்பட்டு வந்தது. கட்சியின் கூட்டணி அரசியல் மற்றும் தேர்தல் திட்டங்கள் போன்ற விஷயங்களில் ஏற்பட்ட முரண்பாடுகளே இந்த பிரிவுக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது. தற்போது தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், அன்புமணி ராமதாஸ் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளார்.

ராமதாஸ் தரப்பு

அதிமுக தலைமை வகிக்கும் இந்த கூட்டணிக்கு முக்கிய பலமாக பாமக இருக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். அதே நேரத்தில், ராமதாஸ் தரப்பு ஆரம்பத்தில் திமுக கூட்டணியுடன் இணைய ஆர்வம் காட்டியதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவின. ஆனால் பல்வேறு அரசியல் காரணங்களால் அந்த முயற்சி இறுதியில் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

அன்புமணி

இந்நிலையில், ராமதாஸுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை என்ற நிலைப்பாட்டில் அன்புமணி உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாஜக மேற்கொள்ளும் சமரச முயற்சிகள் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. மற்றொரு பக்கம், ராமதாஸ் தரப்பு பாஜக-அதிமுக கூட்டணியில் சேர்வதற்கான வாய்ப்பே இல்லை என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எந்த வகையிலும் ராமதாஸ் அந்த கூட்டணிக்கு வரக் கூடாது என்ற கருத்தில் எடப்பாடி பழனிசாமியும் இருப்பதாக கட்சித் தரப்பில் கூறப்படுகிறது.

ராமதாஸ் தனிமை அரசியல்

கட்சி, சின்னம், பெயர், கொடி ஆகியவை அன்புமணி ராமதாஸூக்கு தான் என தேர்தல் ஆணையம் சொல்லிவிட்ட நிலையில், பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவு அன்புமணிக்கு தான் உள்ளது. இதனால் தான் அதிமுக கூட்டணியில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக அவருக்கு 18 முதல் 20 சட்டமன்றத் தொகுதிகள் வரை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதோடு, அன்புமணி ராமதாஸுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

தனித்துப் போட்டி

இதற்கிடையே ராமதாஸ், விஜயுடன் கூட்டணி, திமுகவுடன் கூட்டணி, மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி என பல யூகங்கள் பகிரப்பட்டு வந்தது. இந்த நிலையில் அதிமுக தரப்பிலும் பாமக தரப்பிலும் விசாரித்த போது ராமதாசை யாருமே கூட்டணியில் சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை என்கின்றனர். மேலும், கடைசி நேரத்தில் கூட்டணிக்கு யாரும் வரவில்லை என்றால் தனித்துப் போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சொல்கின்றனர் பாட்டாளிகள்.

அருள், ஜி கே மணி

இந்த நிலையில் பா.ம.க நிறுவனரான ராமதாஸ், பல எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள், மத்திய அமைச்சர்களை உருவாக்கிய என் நிலைமையைப் பார்த்தீர்களா...' என்று குடும்பத்தினரிடம் புலம்பித் தள்ளியிருக்கிறாராம். தோட்டத்துக்கு அடிக்கடி வந்துகொண்டிருந்த எம்.எல்.ஏ-க்கள் ஜி.கே.மணியும் அருளும் தங்கள் வருகையைக் குறைத்துக்கொண்டதே காரணமாம்.

எடப்பாடியிடம் சரண்டர்

அய்யாவுடன் தொடர்ந்து பயணிப்பதில் எந்த அரசியல் லாபமும் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள் அந்த இருவரும். எடப்பாடியிடம் சரண்டராகிவிட சேலம் அருள் திட்டமிட்டிருக்கிறார். அதேபோல, தி.மு.க ஆதரவுடன் பென்னாகரத்தில் சுயேச்சையாகப் போட்டியிட ஜி.கே.மணியும் திட்டமிட்டிருக்கிறார். இதனால்தான், அவர்கள் அய்யாவைப் பார்க்க வருவதில்லை' என்று பொருமுகிறது தோட்டத்து தரப்பு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+