சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அண்ணாவின் மது விலக்கு உறுதியும்! தம்பிகளின் மது ஆலைகள் திறப்பும்!,, ராமதாஸின் பேஸ்புக் பதிவு

Google Oneindia Tamil News

சென்னை: அண்ணாவின் மதுவிலக்கு உறுதியும், தம்பிகளின் மது ஆலைகள் திறப்பும் என்ற தலைப்பில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது முகநூலில் ஒரு கட்டுரையை பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் நிரந்தரமாக மதுக்கடைகளை மூடுமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில் ,

ஸ்டாலின் அரசின் சிக்ஸர் - முதல் நாள் ரூ.165கோடி; 2-வது நாள் ரூ.127 கோடி மது விற்பனை- ராமதாஸ் சாடல் ஸ்டாலின் அரசின் சிக்ஸர் - முதல் நாள் ரூ.165கோடி; 2-வது நாள் ரூ.127 கோடி மது விற்பனை- ராமதாஸ் சாடல்

மதுவை தடுத்த அண்ணா

மதுவை தடுத்த அண்ணா

அன்று அண்ணா - மதுவை தடுத்த வரலாறு!

தமிழ்நாட்டில் 1948-ஆம் ஆண்டு முதல் முழுமையான மதுவிலக்கு நடைமுறையில் இருந்து வந்தது. 1967-ஆம் ஆண்டில் அண்ணா தலைமையிலான திமுக அரசு பதவியேற்றது. அப்போது கடுமையான நிதி நெருக்கடி நிலவியது. நிலைமையை சமாளிக்க மதுக்கடைகளை திறக்கலாம் என்று அதிகாரிகள் யோசனை தெரிவித்தனர். ஆனால், அதை ஏற்க அண்ணா மறுத்து விட்டார்.''

மதுவிலக்கு

மதுவிலக்கு

அரசின் வருமானத்திற்காக மது விலக்கை ரத்துச் செய்வது மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவதற்கு ஒப்பானது!" என்று கூறினார். அதுமட்டுமின்றி, "மது மூலம் கிடைக்கும் வருவாய் என்பது புழுத்துப்போன தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெயை வாங்குவதற்குச் சமம்"என்றும் கூறி மதுவிலக்குக் கொள்கையில் தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்.

நிலைகுலைந்து

நிலைகுலைந்து

"மதுவிலக்கு இல்லாவிட்டால், நிலைகுலைந்து தள்ளாடும் நபர்களை பார்க்க நேரிடும். இப்போது அது இல்லை. இந்த நிலையை நான் வரவேற்கிறேன். இன்று எத்தனையோ குடும்பங்களின் மகிழ்ச்சிக்கு, தாய்மார்களின் மகிழ்ச்சிக்கு மதுவிலக்கே காரணம்" என்று கூறி மதுக்கடைகளை திறக்கும் யோசனையை அண்ணா நிராகரித்தார்.

சாமரம்

சாமரம்

இன்று - மதுவுக்கு சாமரம் அண்ணாவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர் 1971-ஆம் ஆண்டில் மதுக்கடைகளை திறந்தார். அதுமட்டுமின்றி 2006 -11 ஆட்சிக் காலத்தில் 5 புதிய மது ஆலைகளுக்கு அனுமதி அளித்தார். தமிழ்நாட்டில் இப்போது செயல்பாட்டில் உள்ள 11 மது ஆலைகளில் 7 மது ஆலைகள் திமுகவுக்கு ஆதரவானவர்களுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது!

English summary
PMK Founder Ramadoss says about Liquor Free Tamilnadu and Anna's policy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X