சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா எனது நண்பன்... எனக்கு வராது... விரைவில் வருகிறேன்... ராமதாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு பிறகு நான் ஒரு பக்கம், அன்புமணி ராமதாஸ் ஒரு பக்கம் வருகிறோம். கொரோனா எனது நண்பன், எனக்கு வராது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாமகவுக்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்கவில்லை. எனினும் அன்புமணி ராமதாஸுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைத்து.

இந்த 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. டெல்டா மாவட்டங்களுக்கு எப்போது மழை? வானிலை மையம் தகவல்இந்த 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. டெல்டா மாவட்டங்களுக்கு எப்போது மழை? வானிலை மையம் தகவல்

அது போல் சட்டசபை தேர்தலிலும் அதிமுகவுடனான கூட்டணியில் தொடர்ந்த பாமக 5 இடங்களில் வென்றது. இந்த நிலையில் தமிழகத்தில் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக ராமதாஸ் அறிவித்தார்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

மேலும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் கட்சியை கட்டுப்படுத்த முடியவில்லை என விமர்சனம் செய்தார். இதற்கு அதிமுகவினரும் பதிலடி கொடுத்தனர். மேலும் 9 மாவட்டங்களில் வட மாவட்டங்களில் பாமகவுக்கு ஆதரவு இருப்பதால் தனித்து போட்டி என்ற முடிவுக்கு இவர்கள் வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

பாமக

பாமக

எனினும் உள்ளாட்சி தேர்தலில் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியை பாமக பெறவில்லை. இந்த நிலையில் பாமக சிறப்பு பொதுக் குழு கூட்டம் ஆன்லைன் மூலம் நடந்தது. கட்சித் தலைவர் ஜிகே மணி தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட டாக்டர் ராமதாஸ் கூறுகையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவு எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது.

இனி ஆதாயம்

இனி ஆதாயம்

நாம் எவ்வளவு பலமான கட்சி தெரியுமா, இப்போது அந்த பலமெல்லாம் எங்கே போனது? எனது 41 ஆண்டு கால உழைப்புக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டதே? எனவே இனி ஆதாயத்திற்கு யாரும் கட்சியில் இருக்க வேண்டாம். கட்சி விட்டு கட்சி தாவுவதென்றால் இப்போதே சென்றுவிடுங்கள். கட்சியில் இருந்து கொண்டே யாரும் துரோகம் செய்யாதீர்கள்.

கொரோனா பயம்

கொரோனா பயம்

வீடு வீடாக சென்று பாமகவின் பெருமைகள், செயல்திட்டங்களை சொல்லுங்கள். தீபாவளிக்கு பிறகு பாமக நிர்வாகிகள் ஊர் ஊராக சென்று மக்களை சந்திக்கும் ஒரு திட்டம் வைத்திருக்கிறோம். அதை செயல்படுத்துவோம். தீபாவளி முடியட்டும் நான் ஒரு பக்கம் வருகிறேன். அன்புமணி ஒரு பக்கம் வருவார். கொரோனா பயம் எல்லாம் எங்களுக்கு இல்லை. நாங்கள் இரு டோஸ் ஊசிகளை போட்டுக் கொண்டோம். கொரோனா எனக்கு பிரெண்ட்தான்.

குறைகிறது

குறைகிறது

எனக்கு வராது. அதுக்கிட்ட நான் சொல்லிட்டேன். எனக்கு கொரோனா வந்தால் பரவாயில்லை. ஆனால் மக்களுக்கு வரக் கூடாது என்றேன். அதுவும் சரி என சொல்லிவிட்டது. சென்னையில் கூட கேஸ்கள் குறைந்து வருகிறது. இனி மொத்தமாக குறைந்துவிடும் என்றார் ராமதாஸ்.

English summary
PMK founder Ramadoss says that Corona is my friend. It wont affect me.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X