ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்.. பக்கம் பக்கமாய் படித்த ராமதாஸ்! அடுத்தகட்ட ஆக்சனுக்கு தயாராகும் அன்புமணி!
சென்னை: ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் மாற்றி விட்டார் பாமக நிறுவனர் ராமதாஸ். அன்புமணி - ராமதாஸ் இடையே சமாதான பேச்சு வார்த்தைகள் நடந்து வந்த நிலையில் இன்று அவர் 'படித்த' பேட்டி பாமகவில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அன்புமணி நாளை ஆதரவாளர்களுடன் அவசர கூட்டத்தை கூட்டி இருக்கும் நிலையில் என்ன நடக்கப் போகிறது? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது
திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சட்டமன்றத் தேர்தலுக்கு என்ன செய்யலாம் என ஆயத்தமாகி வருகிறது. இந்த நிலையில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகளிடம் எத்தனை சீட்டுகளை கேட்டு பெறலாம் என பெற சிறிய கட்சிகள் முயன்று வருகிறது.
அதிமுக கூட்டணியை வலுப்படுத்த பாமகவை கொண்டு வரலாம் என எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு இருக்கும் நிலையில் ஒரேடியாக பேசி அதிர வைத்து இருக்கிறார் ராமதாஸ். தற்போது பாமகவில் உட்கட்சி மோதல் எழுந்திருக்கும் நிலையில், தந்தை மகன் இடையே முட்டல் மோதல் இருந்தது. இது ஒரு புறம் இருக்க மாநாடு உள்ளிட்ட விவகாரங்களில் ராமதாஸின் பேச்சு அன்புமணி ராமதாஸை ரசிக்க வைக்கவில்லை.

சரி தந்தை மகன் பிரச்சினை தானே ஒருநாள் முடிந்துவிடும் என நிர்வாகிகள் எதிர்பார்த்த நிலையில் இன்று நீண்ட பேட்டி ஒன்றை வாசித்தார். ராமதாஸ் வழக்கமாக ராமதாஸ் படித்து பேசுவது கிடையாது. சிறு குறிப்புகளை மட்டுமே எடுத்துக் கொண்டு பேசுவார். ஆனால் இன்று அவர் அளித்த பேட்டி முழுக்க முழுக்க பக்கம் பக்கமாக எழுதப்பட்டிருந்த பேப்பரை பார்த்து படிப்பது போல் தான் இருந்தது. ஏற்கனவே ராமதாஸின் வயதை பயன்படுத்தி சிலர் அவருக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அதனை உறுதிப்படுத்துவது போலவே இன்றைய நிகழ்வு அமைந்தது.
தாயை அடிக்க பாட்டிலை வீசினார், காலில் விழுந்தார் என்றெல்லாம் ராமதாஸ் பேசியது பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. எப்போதுமே இப்படி ராமதாஸ் பேசியதில்லை என அவரது கட்சி தொண்டர்களே கூறி வருகின்றனர். இது ஒரு புறக்க இருக்க நாளை அவசர ஆலோசனைகள் ஈடுபட இருக்கிறார் அன்புமணி. ஏற்கனவே தனியாக அலுவலகம் ஆரம்பித்திருக்கும் நிலையில் நாளை அங்கு நிர்வாகிகளை வரச் சொல்லி உத்தரவு பறந்து இருக்கிறது.
கடந்த தைலதபுரத்தில் நடந்த மாவட்ட செயலாளர் கூட்டத்தை நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் புறக்கணித்தனர். இந்த நிலையில் தான் தற்போது தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டி இருக்கிறார் அன்புமணி. நாளை எத்தனை நிர்வாகிகள் வருகிறார்கள் என்பதுதான் தைலாபுரம் பனையூரும் எதிர்பார்த்திருக்கும் ஒன்று. நிச்சயம் அன்புமணி தான் எதிர்காலம் என ராமதாஸ் ஆதரவாளர்களே கூறிவரும் நிலையில் பெரும்பாலான நிர்வாகிகள் அதில் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் பொதுக்குழுவை கூட்டி அன்புமணியை நீக்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என ராமதாஸ் கூறியிருப்பதால் அதற்கு முன்னதாகவே கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்டி தன்னை மீண்டும் தலைவராக அறிவிக்க அன்புமணி திட்டமிட்டு இருக்கிறார். அதே நேரத்தில் ராமதாஸ் மீது எந்தவிதமான அதிருப்தியையோ எதிர்ப்பையோ பொதுவெளியில் வெளியிடக் கூடாது எனவும் நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறதாம்.
நாளைய கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பேசப்படும் என்கின்றனர். இது ஒரு புறம் இருக்க கட்சியில் பிரச்சனைக்கும் மூல காரணமான முகுந்தன் விலகி இருப்பது அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக கட்சி தற்போதைக்கு தனது கட்டுப்பாட்டில் வந்திருக்கும் நிலையில் அன்புமணியின் ஆலோசனை கவனத்தைப் பெற்று இருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications