சென்னை மக்களே.. 21 ஆம் தேதி குடையை மறக்காதீங்க.. 4 மாசம் இனி மழையோ மழை! ரமணன் புது அப்டேட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நான்கு மாதங்களுக்கு நல்ல மழை பொழியும் என்று வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார்.

சினிமா பாடலில் வரும் வரியைப் போல 'சட்டென்று மாறியுள்ளது வானிலை'. போன வாரம் எல்லாம் வெப்ப அலை வீசியது. இப்போது கோடை மழை கொட்டி பல மாவட்டங்கள் குளுகுளு என்று மாறி இருக்கின்றன.

Ramanan says there will be more rain in the next 4 months

மே 22ஆம் தேதி (புதன்கிழமை) தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நேற்று முதல் 22ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வடகிழக்கு திசையில் நகர்ந்து சென்று வரும் 24ஆம் தேதி மத்திய வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த வானிலை மாற்றத்திற்கு என்ன காரணம்? மழை வந்து மக்களை மகிழ்ச்சி அடைய வைக்குமா? எனப் பல்வேறு கேள்விகளுக்கு வானிலை ஆய்வு மையம் முன்னாள் இயக்குநர் ரமணன் விளக்கம் அளித்துள்ளார்.

Ramanan says there will be more rain in the next 4 months

இந்த மழைக்கு என்ன காரணம் என்பது பற்றி ரமணன், "குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டு உள்ள பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது. இதில்

மிகக் கனமழை மற்றும் அதி கனமழை அலர்ட் எல்லாம் கூட கொடுத்துள்ளார்கள். சனிக்கிழமை நிலவரப்படி தஞ்சாவூரில் மழைப் பதிவாகியுள்ளது. அதைப்போலத் தருமபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் மழைப் பதிவாகியுள்ளது.

அடுத்துப் பார்த்தால் நெல்லை. வரும் 21 ஆம் தேதி சென்னையில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம் என்று தெரிகிறது. வரக்கூடிய வாரங்களில் மயிலாடுதுறை மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், ஈரோடு மற்றும் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மழையை எதிர்பார்க்கலாம்.

இதில் மிகக் கனமழை என்றால் அது தேனி, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் பெய்வதற்காக வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

ஒரு நிகழ்வு வந்தால் அனைத்தும் சரியாகிவிடும். வெறும் வெப்பச் சலனத்தினால் மட்டும் மழை வந்தால் ஒரு மணிநேரத்திற்கு இடியுடன் கூடி மழை வரும். அந்த மழையானது சூட்டை முழுக்க தனித்துவிடும். அதே நிலை மறுநாள் மழை வந்தால்தான் உண்டு.

Ramanan says there will be more rain in the next 4 months

நிகழ்வுகள் மூலமாக நடக்கக் கூடிய மழையானது 2 அல்லது 3 நாள்கள் வரை தொடரும். ஒருவேளை மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டால், நிறைய மழையானது பெய்யும்.

சமீபத்தில் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின்படி 19ஆம் தேதி அந்தமான் மற்றும் நிகோபர் பகுதிகளில் பருவமழையானது தொடங்கும் எனக் கணித்து கூறப்பட்டுள்ளது. அந்தமான் நமக்குத் தொடர்பில்லை.

கேரளாவில் தொடங்கும் பருவமழையுடன்தான் தமிழ்நாட்டுக்குத் தொடர்பு உள்ளது. அப்படிப் பரத்தால் ஜூன் 1 ஆம் தேதி நமக்கான பருவ மழையை நாம் எதிர்பார்க்கலாம்.

இப்போது மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளதால் கோடை மழை வந்துள்ளது. இதேபோல் கோடைக் காலத்தில் நமக்கு இதற்குப் புயல் கூட வந்துள்ளது.

அப்படிப் பார்த்தால் இந்தக் கோடைக் காலத்தில் 4 நாள்கள் வரை நல்ல மழை இருக்கும். மேலும் வரும் 4 மாதங்கள் வரை நல்ல மழை தமிழ்நாட்டில் பதிவாகும் என்றும் நம்பலாம். அதற்கான அறிகுறிகள் உள்ளன.

ஜூன்,ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நன்றாகத் தமிழ்நாட்டில் மழை பொழிவு காணப்படும். சுருக்கமாகச் சொன்னால், காவேரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அதை உறுதியாக எதிர்பார்க்கலாம்.

Ramanan says there will be more rain in the next 4 months

இந்தளவுக்குத் தென்மேற்கு பருவக்காற்று மழை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். அதற்கு இந்த எல்நினோ தான் காரணம். அடுத்து indian ocean dipole. அடுத்தது பனிப்படலத்தின் பனிப்பொழிவு. இவை மூன்றும் சேர்ந்துதான் மழை உருவாகக் காரணமாக அமைந்துள்ளது.

இதனால் ஒடிசா பகுதியில் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைத் தவிர மற்ற அனைத்து நல்ல மழைக்கான அறிகுறிகள் பதிவாகி உள்ளன. அப்படிப் பார்த்தால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் நன்றாக மழை பொழிவு இருக்கும்.

அதனால்தான் காவேரியில் வெள்ளம் வரும் என்கிறோம். வரும் நான்கு மாதங்கள் தமிழ்நாட்டில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம் என்றோம்" என்கிறார் ரமணன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+