எஸ்.டி கொரியர் முதல் ராமநாதபுரம் எம்.பி வரை.. யார் இந்த நவாஸ் கனி?
சென்னை: ராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மீண்டும் களமிறங்கப்போகிறார். திமுக கூட்டணியில் முறையாக அறிவிக்கப்பட்ட முதல் வேட்பாளர் இவர்தான். நவாஸ் கனி எஸ்.டி.கொரியர் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். இவரது அரசியல் பயணத்தை பார்க்கலாம்.
கடந்த 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நவாஸ் கனி மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது அவரது ஆதரவாளர்களிடையே மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா சாயல்குடி அருகில் உள்ள குருவாடி என்னும் ஊரில் 14.05.1979 ஆம் ஆண்டு பிறந்தவர். காதர் மீரா கனி - ரம்ஜான் பீவி தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் கா. நவாஸ்கனி. பள்ளிப்படிப்பை முடித்த பிறகு படிப்படியாக உயர்ந்து நின்று எஸ்.டி. கூரியர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆவார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலையமான சென்னை , காயிதே மில்லத் மன்ஸிலில் நடைபெற்ற "தி டைம்ஸ் ஆப் லீக்" என்ற ஆங்கில பத்திரிகை துவக்க விழாவில் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் அவர்கள் முன்னிலையில் கா. நவாஸ்கனி தனது 32 வது வயதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
2011ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அஸ்ஸலாம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழுவில் முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை அறங்காவலராகவும் அதைத் தொடர்ந்து மாநில கௌரவ ஆலோசகராகவும் கடந்த 15 ஆண்டுகளாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் சேவையாற்றி வருகின்றார்.
தமிழகத்தை தலைமையிடமாக உழைப்பையே மூலதனமாக கொண்டு துவங்கப்பட்ட எஸ்.டி. கூரியர்ஸ் நிறுவனங்கள் இன்று 1946 கிளைகளையும், 350 இணைப்பு மையங்களோடு விரிவடைந்து இந்நிறுவனத்தின் மூலம் நேரிடையாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளும், தொழிலாளர்களும் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.
இந்நிறுவனம் 2020ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதிலும் கிளைகளை விரிவுபடுத்தி சாதனை படைக்கும் குறிக்கோளோடு செயல்பட்டு வருகின்றது. Academy of Universal Global Peace பல்கலைக் கழகம் கே. நவாஸ்கனிக்கு சிறந்த சமூக சேவைக்கான முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.
எஸ்.டி. கூரியர்ஸ் கல்வி அறக்கட்டளையின் மூலமாக வருடந்தோறும் தமிழகத்தில் படிக்க ஆர்வம் இருந்தும் பொருளாதார நெருக்கடியால் சிரமப்படும் ஏழை மாணவர்களுக்கு 10, 12 ஆம் வகுப்புகள், கல்லூரியில் படிப்பவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுவதோடு அரசு படிப்பில் முதல் மூன்று இடம் பெறுபவர்களுக்கு ஊக்கத் தொகையும், இவர்களின் அண்ணலார் கல்வி அறக்கட்டளை மூலமாக வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த அறக்கட்டளையின் மூலமாக பலநூறு பொறியியல் பட்டதாரிகள் உருவாகி வருகின்றனர். சென்னை பெருவெள்ளம், கேரள மாநிலம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது பல கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் எஸ்.டி. கூரியர்ஸ் மூலமாக இலவசமாக கொண்டு சேர்க்கப்பட்டது.
கஜா புயலால் டெல்டா மாவட்டம் கடும் பாதிப்புக்குள்ளான போது எஸ்.டி. கூரியர்ஸ் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் நிவாரணப் பொருட்கள் ஒருங்கிணைக்கப்பட்டு சேர்க்கப்பட்டதோடு தன்னார்வ தொண்டர்களும் நிவாரணப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
நவாஸ் கனியைப் பற்றியும் அவரது குடும்பத்தினரைப் பற்றியும் அவரது ஆதரவாளர்கள் முகநூலில் பதிவிட்டுள்ளனர்.
நவாஸ் கனியின் குடும்பத்தினர் ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய ஆயிரக்கணக்கான வீர தியாகிகளின் பட்டியலில் சாயல்குடி பகுதியின் சேகுமைதீன் கனி சேர்வைக்காரர் குடும்பம் முக்கியமானது. சுதந்திர போராட்ட தாகத்தால் இவர் குடும்பத்தினர் காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்து செயல்பட்டனர்.
பர்மா நாட்டில் உழைத்து சம்பாதித்த பொருளாதாரத்தின் பெரும்பகுதியை நேதாஜியின் ஆயுதபோராட்டத்திற்காக வாரி வழங்கினர்
சேது சீமையின் நாயககர்களான சேதுபதி மன்னர் குடும்பத்துடன் இருந்த உணர்வு பூர்வமான நட்பு காரணமாக சாயல்குடி பகுதியில் மூவாயிரம் குருக்கம் நிலத்தை சேகுமைதீன் கனி சேர்வைக்காரருக்கு மன்னர் வழங்கினார்
அவ்வளவு நிலத்தையும் வீடற்ற ஏழைக்குடும்பங்களுக்கு தானமாக வழங்கினர் சேகுமைதீன் கனி சேர்வைக்காரரின் தந்தை. இதற்கு நன்றி கூறும் முகமாக இன்றைக்கு அப்பகுதி கனி ராவுத்தர் நினைவாக கனிராஜபுரம் என அழைக்கப்படுகிறது. தற்போது கன்னிராஜபுரம் என மருவி விட்டது. சேகுமைதீன் கனி சேர்வைக்காரர் குடும்பத்தின் இளைய வாரிசு தான் நவாஸ் கனி
சுதந்திர போராட்ட ஈர்ப்பால் இவர் குடும்பத்தில் அதிகமானவர்கள் காங்கிரஸ் பேரியக்கத்திலும் சமூக நீதி கொள்கை மீது கொண்ட பற்றுதல் காரணமாக சிலர் திமுக விலும் செயல்பட்டு வருகின்றனர்
இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்ட இன்னொரு தேசிய கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ல் தன்னை இணைத்துக் கொண்டு பணி செய்து வருகிறார் நவாஸ் கனி தனது சொந்த பணத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் உயர்கல்வி பயில நிதியுதவி செய்து வருகிறார். மருத்துவ உதவி மனித நேய உதவிகள் ஏராளம் செய்து வருகிறார். மண்ணின் மைந்தரான நவாஸ் கனி வேட்பாளராக அமைந்தது மாவட்ட மக்களுக்கு கிடைத்த மாபெரும் வாய்ப்பு என்று பதிவிட்டுள்ளனர் நவாஸ் கனியின் ஆதரவாளர்கள்.
ராமநாதபுரத்தின் எம்.பியாக இருக்கும் நவாஸ் கனி தனது செல்வாக்கை மீண்டும் நிரூபிப்பாரா பார்க்கலாம்.
-
என்டிஏவுக்கு தமிழ்நாடே 'நோ'.. நான் இருக்கும் வரை பாஜகவுக்கும் நோ எண்ட்ரி.. அதிர விட்ட மு.க.ஸ்டாலின்! -
மகளிர் உரிமைத் தொகை.. திட்டத்தை அறிவித்த திருச்சியில் நின்று மு.க.ஸ்டாலின் சொன்ன வார்த்தை! -
திருச்சி திமுக மாநில மாநாடு LIVE:உங்க அப்பனே வந்தாலும் நடக்காது! பாஜவுக்கு சவால் விட்ட ஸ்டாலின் -
குலுங்கியது திருச்சி.. திமுக மாநாட்டில் ரேம்ப் வாக் செய்த ஸ்டாலின்! தொண்டர்கள் உற்சாகம் -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! -
45% வாக்கு உறுதி.. திமுகவின் பரபர இன்டர்னல் சர்வே.. அடித்து மேலே வரும் தவெக விஜய்.. ரகசிய ரிப்போர்ட் -
ஸ்டாலினின் கையில் அந்த சர்ப்ரைஸ் லிஸ்ட்.. திமுக துரைமுருகன் முதல் பொன்முடி வரை! 15 விஐபிகளுக்கு கிலி? -
காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் என்னென்ன? டெல்லி தலைகளுடன் சென்னையில் நடந்த முக்கிய ஆலோசனை! -
க்ளோஸ்.. சுள்ளென சுட்டெரிக்கும் உதயசூரியன்.. சூடான தேர்தல் களம்! அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த திமுக! -
திமுகவுக்கு எதிராக மதுரையில் பிரம்மாண்ட அஸ்திரம்.. அதிமுக எடுத்த பெரிய முடிவு -
திருச்சி திமுக மாநாட்டில் கமகமக்கும் பிரியாணி.. 10 லட்சம் பேருக்கு சுடச்சுட ரெடி!












Click it and Unblock the Notifications