ராமநாதபுரத்தில் புதிய பஸ் ஸ்டாண்டு.. ரூ.20 கோடியில் நாளை திறப்பு.. இன்றே செல்கிறார் ஸ்டாலின்! ஹேப்பி
சென்னை: ராமநாதபுரத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று வருகை தருகிறார்.. நாளை புதிய பஸ் ஸ்டாண்டு ராமநாதபுரத்தில் திறக்கப்பட உள்ள நிலையில், சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை மதுரை செல்கிறார். ஸ்டாலினின் இந்த பயணம், அரசின் வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்வதோடு, மக்களுடன் நேரடி தொடர்பு கொள்வதற்கான முக்கிய நிகழ்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.. முதல்வரின் வருகையையொட்டி, ஆயிரக்கணக்கான போலீசார் ராமநாதபுரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ராமநாதபுரம் அருகேயுள்ள பேராவூர் பகுதியில் நடைபெறவுள்ள விழாவில் முடிவுற்ற திட்டங்களை திறந்து வைப்பது, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

ராமநாதபுரத்தில் புதிய பஸ் ஸ்டாண்டு
இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க கார் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. ராமநாதபுரத்துக்கு கடந்த திங்கட்கிழமையிலேயே முதல்வர் வருகை தர திட்டமிடப்பட்டிருந்தது.. ஆனால் கரூரில் கூட்ட நெரிசல் பலி சம்பவம் காரணமாக நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டன,
அந்தவகையில், நாளைய தினம் ராமநாதபுரத்தில் ஒத்திவைக்கப்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.. இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை மதுரை செல்கிறார். ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனூரில் அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ ஆகியோர் தலைமையில் மாவட்டத்தின் அனைத்து நிர்வாகிகளும் திரளாக சென்று அவருக்கு வரவேற்பு அளிக்க உள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின்
அதனைத் தொடர்ந்து கார் மூலம் இன்று இரவு ராமநாதபுரம் வரும் ஸ்டாலின், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் இன்று இரவு தங்குகிறார்
நாளை அதாவது வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் ராமநாதபுரம் அருகே பேராவூரில் நடைபெறும் அரசு விழாவில் அவர் கலந்து கொண்டு ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் உள்பட மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.
பழுதான கட்டிடம், போதிய இடவசதியின்மை காரணமாக கடந்த 2023ல் ரூ.20 கோடியில் புதிய பஸ் ஸ்டாண்ட் 16, 909 சதுர அடியில் கட்டுமானப் பணிகள் ஆரம்பமானது.. இதையடுத்து, விரிவாக்கப்பணிகள் முடிந்து புதிய பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுகிறது.
நலத்திட்ட உதவிகள்
அதேபோல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். சுமார் 54 ஆயிரம் பயனாளிகளுளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் எம்பி., எம்எல்ஏக்கள் கலந்து கொள்கின்றனர்.. முதல்வர் ஸ்டாலினின் வருகையையொட்டி அவரை வரவேற்கும் வகையில் பார்த்திபனூர் தல் ராமநாதபுரம் வரை வழிநெடுக திமுக கொடி கட்டப்பட்டுள்ளது.
முதல்வரின் ராமநாதபுரம் வருகையையொடடி, பார்த்திபனூர், பேராவூர், மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடைவிதித்து மாவட்ட கண்காணிப்பாளர் சந்தீஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். தடை உத்தரவை மீறினால், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்..
முதல்வரின் இந்த பயணத்தின்போது, மீனவர்கள் பிரச்சனை, வறட்சி நிவாரணம் போன்ற விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் முதல்வரின் இந்த 2 நாள் வருகையானது, ராமநாதபுரம் மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி வருகிறது..












Click it and Unblock the Notifications