ரம்யாவின் உல்லாச வீடியோ.. லாக்கரில் கோடி கோடியாய் பணம், தங்கம் நகை.. சென்னை தொழிலதிபரின் நிலைமை?
சென்னை: சென்னை புரசைவாக்கத்தில் தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளைப் பறித்த கள்ளக்காதலன் தலைமறைவான நிலையில், அவனது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இதில் ஒரு பெண்ணும் சம்பந்தப்பட்டுள்ளது, மிகப்பெரிய அதிர்ச்சியை தந்து வருகிறது.. என்ன நடந்தது சென்னையில்?
சென்னை புரசைவாக்கம் முருகப்பா தெருவில் உள்ளது அந்த அப்பார்ட்மெண்ட்.. அங்கு வசித்து வருபவர் ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).. 35 வயதான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்..

வாடகை வீடு
இவரது கணவர் அண்ணாசாலையில் கார் மற்றும் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் மொத்த வியாபாரம் செய்து வரும் ஒரு பெரிய தொழிலதிபர் ஆவார்..
கடந்த 2025ம் ஆண்டு இவர்களது குடியிருப்பின் 4வது மாடியில் சங்கீதா (53) என்பவர் தனது மூத்த மகன் திலீப் (34) மற்றும் இளைய மகன் அங்கிட் (31) ஆகியோருடன் வாடகைக்கு குடியேறினார்.. பக்கத்து வீட்டு பழக்கத்தில் சங்கீதா தொழிலதிபரின் மனைவி ரம்யாவிடம் அடிக்கடி பேசி நெருக்கமாக பழகத் தொடங்கியுள்ளார்.. இந்தச் சூழலில் சங்கீதாவின் மூத்த மகன் திலீப்புக்கும் ரம்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது..
தொழிலதிபர் மனைவி சங்கீதா
தொழிலதிபர் அண்ணாசாலையில் உள்ள தனது கடைக்கு சென்ற பிறகு, வீட்டில் தனியாக இருக்கும் ரம்யாவை தேடி திலீப் அடிக்கடி வந்துள்ளார்.. இருவரும் தனிமையில் இருந்து வந்துள்ளனர்.. திலீப்புக்கு சரியான வேலை இல்லாத காரணத்தால், அவனது ஆடம்பரச் செலவுகளுக்காக ரம்யா அவ்வப்போது தன்னிடம் உள்ள நகைகளைக் கொடுத்து உதவியுள்ளார்..
ஒருகட்டத்தில் தன்னிடம் உள்ள தங்கம் மற்றும் வைர நகைகளைக் காட்டி இவை அனைத்தும் உனக்குத்தான், நாம் இருவரும் சந்தோஷமாக இருக்கலாம் என்று ரம்யா கூறியுள்ளார்.. இதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட திலீப், ஆசை வார்த்தை கூறி ரம்யாவுடன் நெருக்கமாக இருந்தபோது அதனை ரகசியமாகத் தனது செல்போனில் ஆபாச வீடியோ மற்றும் போட்டோக்களை எடுத்து வைத்துள்ளார்..
உல்லாச வீடியோ
பிறகு அந்த வீடியோவை வைத்தே ரம்யாவை மிரட்டத் தொடங்கிய திலீப், அவரிடமிருந்து சிறுகச் சிறுக பெரும் மதிப்பிலான நகைகளைப் பறித்துள்ளார்.. வீட்டில் சும்மா இருக்கும் நகைகள் தானே என்று எண்ணி ரம்யாவும் தொடர்ந்து கொடுத்து வந்துள்ளார்..
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு யாரிடமும் சொல்லாமல் திலீப் தனது குடும்பத்துடன் வீட்டை காலி செய்துவிட்டுத் திடீரென தலைமறைவானார்.. திலீப்பைத் தொடர்பு கொள்ள முடியாமல் ரம்யா தவித்த நிலையில், அவரது கணவர் ஒரு சுபநிகழ்ச்சிக்காக வீட்டில் இருந்த நகைகளைச் சரிபார்த்துள்ளார்.. அப்போது லாக்கரில் இருந்த பெருமளவிலான தங்கம் மற்றும் வைர நகைகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்..
கோடி பணம், தங்கம் நகைகள்
கணவர் கேட்ட கேள்வியால் பயந்துபோன ரம்யா, திலீப் தன்னுடன் தனிமையில் இருந்தபோது எடுத்த ஆபாச வீடியோவைக் காட்டி மிரட்டிய உண்மையை அழுதுகொண்டே ஒப்புக்கொண்டார்..
கணக்கெடுத்துப் பார்த்ததில் சுமார் 850 கிராம் தங்க நகைகள், விலை உயர்ந்த வைர நகைகள், இரண்டரை கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.. இதன் மொத்த மதிப்பு சுமார் 4 கோடி ரூபாய் ஆகும்..
இது குறித்து வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, செல்போன் சிக்னல் உதவியுடன் சங்கீதா மற்றும் அங்கிட் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்..
தொழிலதிபரின் மனைவி
முக்கிய குற்றவாளியான திலீப் பல கோடி மதிப்புள்ள நகைகளுடன் மும்பை வழியாக தனது சொந்த மாநிலமான ராஜஸ்தான் தப்பிச் சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.. திலீப்பைப் பிடிக்க துணை கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் ராஜஸ்தான் விரைந்துள்ளனர்..
திலீப் பிடிபட்டால் மட்டுமே இதுபோன்று சென்னையில் இன்னும் எத்தனை தொழிலதிபர்களின் மனைவிகளை அவன் காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்றியுள்ளான் என்ற முழு விவரமும் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்..!!












Click it and Unblock the Notifications