சட்டசபை தேர்தல்: ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா எக்ஸிட் போல் கணிப்பு ஏறத்தாழ சரியாகத்தான் இருக்கிறதே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா யூ டியூப் சேனல் வெளியிட்ட எக்ஸிட் போல் முடிவு மட்டுமே தற்போதைய தேர்தல் முடிவுகளுடன் நெருக்கமாக ஒத்து போகிறது.

Recommended Video

    Rangaraj Pandeys Chanakyaa Exit Polls | Tamil Nadu Election 2021 Exit Poll| Oneindia Tamil

    சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகளை (தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு) பல நிறுவனங்கள் வெளியிட்டன. பெரும்பாலான சேனல்கள் திமுக 195 இடங்கள் வரை வெல்லும்,; அதிமுகவுக்கு அதிகபட்சம் 80 இடங்கள்தான் கிடைக்கும் என கூறின.

    அதேநேரத்தில் ரங்கராஜ் பாண்டே தமது யூ டியூப் சேனலான சாணக்யாவில் எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட்டிருந்தார். ஏப்ரல் 29-ந் தேதி முதலாவது எக்ஸிட் போல் முடிவுகளை ரங்கராஜ் பாண்டே வெளியிட்டார்.

    பாண்டே கணிப்பு

    பாண்டே கணிப்பு

    அதில் திமுக 109; அதிமுக 101 தொகுதிகளில் வெல்லும் வாய்ப்புள்ளது ; இழுபறியாக 24 தொகுதிகள் இருக்கலாம் என தெரிவித்திருந்தார் பாண்டே. இன்று சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    தற்போதைய நிலவரம்

    தற்போதைய நிலவரம்

    தற்போதைய நிலவரப்படி ஏறத்தாழ ரங்கராஜ் பாண்டேவின் கணிப்பு சரியானதாகத்தான் இருக்கிறது. இழுபறியாக இருக்கும் என கணிக்கப்பட்ட 24 தொகுதிகள் திமுக அல்லது அதிமுகவுக்கு சாதகமாக இருக்கலாம் எனவும் யூகமாக தெரிவித்திருந்தார். தற்போதைய நிலையில் திமுக அணி 137; அதிமுக 96 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.

    கட்சிகளுக்கான இடங்கள்

    கட்சிகளுக்கான இடங்கள்

    அதேபோல் நேற்று மீண்டும் சாணக்யா யூ டியூப் சேனலில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எத்தனை கிடைக்கும் என்பதை வெளியிட்டிருந்தார் ரங்கராஜ் பாண்டே. அதில் திமுக- 84; அதிமுக-81; காங்.- 11; பாமக 9; பாஜக 5 என தெரிவித்திருந்தார். மேலும் இடதுசாரிகளுக்கு 6, காங்கிரஸ் 11, விசிக 2, முஸ்லிம் லீக் 2 இடங்களைப் பெறும் எனவும் கூறியிருந்தார் ரங்கராஜ் பாண்டே.

    பாண்டே சரியான கணிப்பு

    பாண்டே சரியான கணிப்பு

    தற்போதைய நிலையில் ரங்கராஜ் பாண்டேவின் கணிப்பின்படியே பாமக, பாஜக அத்தகைய இடங்களைப் பெற்றிருக்கிறது. மேலும் காங்கிரஸ் கட்சி தற்போது 13 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. சிபிஐ, சிபிஎம் ஆகிய இடதுசாரி கட்சிகள் தலா 2 இடங்களில் முன்னிலையில் உள்ளன. மதிமுக, விசிக 4 இடங்களில் முன்னிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+