ராணிப்பேட்டை தொகுதி! கடைசி நேரத்தில் அடித்து பிடித்து தாக்கல் செய்த ஆர்.காந்தி வேட்புமனு ஏற்பு!
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை சட்டசபை தொகுதி வேட்பாளராக கடைசி நேரத்தில் களமிறங்கிய அமைச்சர் ஆர்.காந்தியின் வேட்புமனு ஏற்கப்பட்டுவிட்டது. காந்தியின் மகன் வினோத் தனக்கு கிடைத்த வாய்ப்பை தனது தந்தைக்கு விட்டுக் கொடுத்தார்.
ராணிப்பேட்டை அமைச்சர் காந்தியின் கோட்டை என சொல்லப்படுகிறது. இங்கு அவர் 4 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டு வென்றுள்ளார். அதாவது 20 ஆண்டுகள் ராணிப்பேட்டைக்கு எம்எல்ஏவாக இருந்துள்ளார்.

1996, 2006, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்றார். ஆனால் 2011, 2001 ஆகிய ஆண்டுகளில் தோல்வியடைந்தார். தற்போது இந்த தொகுதியில் திமுக வேட்பாளரை எதிர்த்து பாஜக களம் காண்கிறது. பாஜக சார்பில் விஎம் கார்த்திகேயன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தாரிகா சல்மான் மற்றும் தவெக சார்பில் தாஹீரா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் காந்திக்கு வயதாகிவிட்டதாலும் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டும் வரும் தேர்தலில் திமுக அவருக்கு சீட் கொடுக்கவில்லை. அவருக்கு பதிலாக அவரது மகன் வினோத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
ஆனால் இதற்கு ஆர்.காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். தனக்குத்தான் சீட் கொடுக்க வேண்டும் என தலைமைக்கு கோரிக்கை விடுத்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை வினோத் காந்தி, ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடவில்லை என கூறியிருந்தார்.
மேலும் தனக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்த அவர், தனக்கு கிடைத்த வாய்ப்பை தந்தைக்கு விட்டுக் கொடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று ஆர்.காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில், என் மகனுடன்தான் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தேன். தொகுதியில் எந்த சண்டையும் இல்லை. ஸ்டாலினின் ஒப்புதலுடன்தான் வேட்புமனு தாக்கல் செய்ய வந்துள்ளேன் என காந்தி தெரிவித்தார்.
அது போல் அவரது மகன் வினோத் கூறுகையில், "என் தந்தை போட்டியிட விரும்பினார். அவரது ஒத்துழைப்பு இல்லாமல் என்னால் களப்பணியாற்ற முடியாது. அது போல் திமுக தலைமையும் என் தந்தைக்கு Form B வழங்கியதால் நான் போட்டியில் இருந்து விலகிக் கொண்டேன்" என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இன்றைய தினம் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. அதில் கடைசி நேரத்தில் வேட்புமனுதாக்கல் செய்த ஆர்.காந்தியின் வேட்புமனு ஏற்கப்பட்டது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications