அரக்கோணம் திமுக முன்னாள் நிர்வாகி விவகாரம்.. நடந்தது என்ன? காவல்துறை வெளியிட்ட பரபரப்பு விளக்கம்
அரக்கோணம்: அரக்கோணத்தில் திமுக முன்னாள் நிர்வாகி தெய்வச்செயல் மீது கல்லூரி மாணவி ஒருவர் பாலியர் புகார் கூறியதற்கு போலீசார் வேண்டுமென்றே எஃப் ஐ ஆர் பதிவு செய்யாமல் தாமதப்படுத்தியதாக கூறப்பட்ட நிலையில் இது தொடர்பாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் காவனூர் பகுதியை சேர்ந்தவர் திமுக முன்னாள் இளைஞரணி தெய்வச்செயல். இவர் மீது அரக்கோணத்தை சேர்ந்த கல்லூரி மாணவி பரபரப்பு புகார் ஒன்றை கூறினார். அதாவது, நான் உள்பட 20க்கும் மேற்பட்ட பெண்களை அரசியல்வாதிகளுக்கு இரையாக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். மேலும் இது குறித்து வீடியோ வாயிலாகவும் குற்றச்சாட்டை வைத்தார்.

வீடியோ வெளியிட்டு புகார்
அந்த வீடியோவில் பேசும் போது, என் தாய் மற்றும் தந்தையை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி திருமணம் செய்து கொண்டார். இதனால் என் படிப்பும் நாசமாய் போய்விட்டது. அதேபோல் என்னை போல் 20க்கும் மேற்பட்ட பெண்கள் திமுக பிரமுகர் தெய்வச்செயலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தேன். அப்போது போலீசார் என்னிடம் 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
ஆனால் அவர்கள் மீது எனக்கு நம்பிக்கை வரவில்லை. முதலில் எப் ஐ ஆரும் பதிவு செய்யவில்லை என கூறியிருந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மாணவி புகார் அளித்தது தொடர்பாக போலீசார் தரப்பில் பரபரப்பு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
போலீசார் விளக்கம்
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், காவனூர் பகுதியை சேர்ந்த தெய்வச்செயல் என்பவரால் ஏமாற்றி திருமணம் செய்யப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் சில மிகைபடுத்தப்பட்ட தகவல்கள் பரவி வருகின்றன.
மேற்படி சம்பவம் தொடர்பாக காலதாமதமாகவும், சில அரசியல் கட்சியினரிடம் அப்பெண் சென்று முறையிட்டதாலும் காவல்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என செய்தி பரப்பப்படுவது உண்மைக்கு மாறானது. இச்சம்பவம் தொடர்பாக மேற்படி பெண் கொடுத்த புகாரின் பேரில் கடந்த 10.05.2025 அன்றே அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் இருந்து வருகிறது.
பொருத்தமற்ற தகவல்களை தெரிவித்தார்
இவ்வழக்கு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மேற்படி மனுதாரர் எதிரி தெய்வச்செயல் என்பவரை கடந்த 31.01.2025-ம் தேதி எவ்வித நிர்பந்தமுமின்றி திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்ததும் தெரிய வருகிறது.
மேலும், தன்னை போன்ற 20 வயதுள்ள 20 பெண்கள் இவ்வழக்கின் எதிரியான தெய்வச்செயல் என்பவரது கொடூர பிடியில் சிக்கி உள்ளதாக அப்பெண் தெரிவித்துள்ளார் என சமூக வலைதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி, மனுதாரர் தான் அளித்த வெவ்வேறு புகார்களில் தன்னை போன்று பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றுக்கொன்று பொறுத்தமற்ற தகவல்களை தெரிவித்துள்ளதோடு, அப்பெண்களைப் பற்றிய எவ்வித தகவல்களையோ, முகாந்திரத்தையோ விசாரணையின்போது தெரிவிக்கவில்லை.
விசாரணை நடந்து வருகிறது
எனவே, இதுசம்பந்தமாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், அரசியல் பிரமுகரின் உதவியாளர் ஒருவருக்கு மனுதாரரை இரையாக்க முயற்சித்ததாக சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டுள்ளது உண்மைக்கு மாறானது. மேற்படி மனுதாரர் கொடுத்த புகார்களில் இதுபோன்ற தகவல் எதையும் குறிப்பிட்டு தெரிவிக்கவில்லை.
மனுதாரர் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இதுசம்மந்தமாக மனுதாரர் கொடுத்த வெவ்வேறு புகார்கள் மீது விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கடந்த 19.05.2025 அன்று மேற்படி மனுதாரரிடம் பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரணை செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய அனைத்து வழிமுறைகள் மற்றும் சுற்றறிக்கைகளில் உள்ள அறிவுறுத்தல்களின் படி அனைத்து நடவடிக்கைகளையும் முறையாக பின்பற்றப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
தேசிய மகளிர் ஆணையம்
மேலும் இவ்வழக்கில் காவல்துறை சார்பில் மனுதாரருக்கு முதல் தகவல் அறிக்கை நகலினை கொடுத்தும் மனுதாரர் அதனை பெற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார். இவ்வழக்கில் மேலும் விசாரணை மேற்கொண்டு, அதன் அடிப்படையில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே அரக்கோணம் பாலியல் சம்பவம் தொடர்பாக விசாரணையை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து கையில் எடுத்துள்ளது. இதனால் திமுக பிரமுகர் தெய்வச்செயல் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
ஸ்டாலினின் ரூ. 8000 கூப்பன் Vs எடப்பாடியின் இலவச Fridge திட்டம்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
ரூ.2000 ஆக உயர்த்தப்படும் மகளிர் உரிமைத் தொகை.. மாணவிகளுக்கு இனி ரூ.1500! ஸ்டாலின் வாக்குறுதி! -
Rahul Gandhi: தமிழக அரசியல் மீது ராகுல் காந்தியின் பாராமுகம்… திமுக தலைமை மீது அதிருப்தியா? -
OPS: விருப்ப மனு கொடுத்தும் சீட் கிடைக்கலையே.. திடீரென அண்ணா அறிவாலயம் வந்த ஓபிஎஸ் மகன்! -
DMK Manifesto: முதியோர் உதவித்தொகை இனி ரூ. 2 ஆயிரமாக உயர்வு.. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்! -
4 மேயர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்.. திமுக வேட்பாளர்கள் பட்டியலில் இருக்கும் மெகா ட்விஸ்ட்! -
திமுக VS அதிமுக.. சென்னையில் 12 இடங்கள் உள்பட 121 தொகுதிகளில் நேரடி போட்டி.. மாவட்ட வாரியாக முழு லிஸ்ட் -
முட்டி மோதியும் கண்டுகொள்ளாத திமுக, அதிமுக.. 4 தொகுதிகளில் மன்சூர் அலிகான் தனித்துப் போட்டி! -
திவ்யா சத்யராஜ், வைஷ்ணவி, ராஜீவ் காந்தி, கனிமொழி, போஸ் வெங்கட்டுக்கு சீட் ஏன் கிடைக்கவில்லை?












Click it and Unblock the Notifications