ராணிப்பேட்டையில் இப்படியொரு பெண்ணா? கிறுகிறுக்க வைத்த தகாத உறவு.. நள்ளிரவில் சென்னை பெருங்குடி
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை சம்பவத்தையடுத்து 2 பெண்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.. யார் அவர்கள்? என்ன நடந்தது?
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்துள்ளது குப்பிடிச்சாத்தம்.. இங்கு வசித்து வருபவர் சதீஷ்குமார்.. திருமணமானவர்.. 30 வயதான சதீஷ்குமார் சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்..

கம்பெனி: இதே கம்பெனியில் சத்தியவாணி என்ற 36 வயது பெண்ணும் வேலை பார்த்து வருகிறார்.. இவர் சென்னை பெருங்குடியைச் சேர்ந்தவர். கணவனை இழந்த சத்தியவாணிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள்..
ஒரே கம்பெனியில் பணிபுரிந்துவருபவதால், சதீஷூக்கும், சத்தியவாணிக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.. ஆனால், சதீஷ்குமார் தனக்கு திருமணமாகவில்லை என்று பொய் சொல்லி, சத்தியவாணியிடம் பழகி வந்திருக்கிறார்.. கடந்த 2018 முதல் இந்த உறவு இவர்களுக்குள் நீடித்து வந்ததாக சொல்கிறார்கள். நம்முடைய வீட்டில் பெற்றோரிடம் பேசி திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் சொல்லி சொல்லியே சத்தியவாணியிடம் உறவை தொடர்ந்து வந்தாராம் சதீஷ்குமார்.
திருமண ஆசை: இதனால், கல்யாண பேச்சை எடுத்துள்ளார் சத்தியவாணி.. தன்னை விரைவில் திருமணம் செய்து கொள்ளும்படியும் சதீஷ்குமாரிடம் கூறியிருக்கிறார்.. ஆனால், கல்யாண பேச்சை எடுத்தாலே, அதை தவிர்க்கும்படியாக பேசினாராம் சதீஷ்..
நாளுக்கு நாள் சத்தியவாணி, கல்யாணம் செய்துகொள்ளும்படி டார்ச்சர் செய்யவும், கள்ள உறவை கைவிடுவதென முடிவு செய்த சதீஷ், ஒருகட்டத்தில் சத்தியவாணியிடம் பேசுவதையே தவிர்த்திருக்கிறார்.. சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் ராணிப்பேட்டைக்கு வந்த சதீஷ், அதற்கு பிறகு மறுபடியும் சென்னைக்கு போகவில்லையாம்.. ஏன் வேலைக்கு போகவில்லை என்று குடும்பத்தினர் கேட்டதற்கு, லீவு போட்டுள்ளதாக சொல்லி சமாளித்திருக்கிறார்.
தவிர்த்த சதீஷ்: வேலைக்கு சதீஷ் வராததை கண்டு அதிர்ச்சி அடைந்த சத்தியவாணி, சதீஷூக்கு போன் செய்துள்ளார். ஆனால், சத்தியவாணி போன் செய்தபோதும், அதனை எடுக்காமலேயே தவிர்த்துள்ளார் சதீஷ்.
இதனால் ஆத்திரமடைந்த சத்தியவாணி, சதீஷ்குமாரை கடத்திவிடுவது என முடிவு செய்தார்.. இதற்காக கூலிப்படையை ஏற்பாடு செய்தார் சத்தியவாணி.. அவர்களுக்கு பணம் தந்து, சதீஷை காரில் கடத்தி வரும்படி அனுப்பி வைத்துள்ளார். உடனே கூலிப்படையினரும், சதீஷ் வீட்டுக்கு காரில் வந்துள்ளனர்.. ஆனால், சதீஷ்குமார் வீட்டில் இல்லையாம். அவரது அண்ணன் ரஞ்சித் குமார்தான் வீட்டில் இருந்திருக்கிறார்..
கடத்தல்: "உங்கள் தம்பி சதீஷ் பற்றி பேச வேண்டும்" என்று சொல்லி, 35 வயதான ரஞ்சித்தை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி, சென்னைக்கு கடத்தி வந்திருக்கிறார்கள்.. நீண்ட நேரமாகியும், ரஞ்சித் வீட்டுக்கு வராததால், குடும்பத்தினர் பதறிப்போனார்கள்.. இதனால், பல இடங்களில் ரஞ்சித்தை தேட ஆரம்பித்தார்கள்.
அந்த நேரம்பார்த்து, சத்தியவாணியிடமிருந்து சதீஷூக்கு போன் வந்துள்ளது.. "உன் அண்ணனை கூலிப்படை வைத்து நான் தான் கடத்தினேன்.. நீ உடனே சென்னைக்கு வந்தால் மட்டுமே அவரை உன் விட்டுக்கு அனுப்புவேன்" என்று மிரட்டினாராம்.. இதைக்கேட்டு அதிர்ந்த சதீஷ்குமார், உடனடியாக வாழைப்பந்தல் போலீசில் புகார் செய்தார்..
பெருங்குடி: இந்த புகாரின்பேரில் போலீசாரும், சத்தியவாணியின் செல்போன் நம்பரை வைத்து ஆய்வு செய்தனர்.. அப்போதுதான், சென்னை பெருங்குடியில் செல்போன் சிக்னல் காட்டியது.. இதையடுத்து, சென்னைக்கு போலீசார் விரைந்து சென்று, நள்ளிரவிலேயே அந்த பெருங்குடியில் ரஞ்சித் குமாரை மீட்டனர்.. கடத்தலுக்கு பயன்படுத்திய டாட்டா சுமோவையும் கிண்டியில் பறிமுதல் போலீசார்,
அத்துடன், சத்தியவாணியையும், அவருக்கு கூலிப்படை ஏற்பாடு செய்ய உடந்தையாக இருந்த தோழிகளான சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த தனலட்சுமி, புவனேஸ்வரி என 3 பேரையும் கைது செய்தனர்.. ஆனால், கூலிப்படை சேர்ந்த 3 பேரும் எஸ்கேப் ஆகிவிட்டனர்.. அவர்களை தேடி கொண்டிருக்கிறார்கள்.
அதிர்ச்சி: முன்னதாக, சத்தியவாணியை கைது செய்து போலீசார் விசாரித்தபோது, தன்னுடன் நெருங்கி பழகி ஏமாற்றிவிட்டதால்தான் இப்படி அவரது அண்ணனை கடத்தும்படி நேரிட்டுவிட்டது என்று போலீசில் சொன்னாராம்.
ஆனால், சத்தியவாணி கைது செய்து விசாரிக்கப்படும்வரை, சதீஷ்குமாருக்கு ஏற்கனவே கல்யாணமாகிவிட்டது என்ற விஷயம் சத்தியவாணிக்கு தெரியவேயில்லையாம்.. போலீசார் சொல்லித்தான் உண்மை தெரியவந்துள்ளது.. இதைக்கேட்டதும், சத்தியவாணி கடுமையாக அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.. அதேபோல, சத்தியவாணியுடன் பலவருடமாகவே கள்ள உறவு இருப்பதை அறிந்து சதீஷ்குமாரின் மனைவியும் அதிர்ச்சி அடைந்துவிட்டாராம்...!!!












Click it and Unblock the Notifications