ரேஷன் கடைகளில் திடீர் மாற்றம்.. தமிழ்நாடு அரசின் அடுத்த அதிரடி.. சபாஷ் ராதாகிருஷ்ணன்.. இனி நிம்மதி
சென்னை: ரேஷன் பொருட்களில் கூடுதலாக மற்றொரு பொருளை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.. இதுகுறித்து உழவர் உழைப்பாளர் கட்சியும் முக்கிய வேண்டுகோள் ஒன்றை தமிழக அரசுக்கு விடுத்துள்ளது.
நியாய விலை கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துவருகின்றனர்..
அதேபோல இந்த கோரிக்கையை, ஏற்க வேண்டும் என்று, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவும், ஏற்கனவே தமிழக அரசை வலியுறுத்தியிருந்தார்..

அமைச்சர் அறிவிப்பு: அந்தவகையில், அமைச்சர் சக்கரபாணியும் 2 மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "பாஜக கட்சி அரசியல் ஆதாயத்துக்காக போராட்டம் நடத்தி வருகிறது. தமிழகத்தில் விவசாயிகள் தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்... இந்த கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
அதேபோல கடந்த வாரம் செய்தியாளர்களிடடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் ரேஷன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தை விரிவு படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியிருந்தார்.

பாமாயில் : அமைச்சர் சக்கரபாணியின் இந்த அறிவிப்பானது, ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது.. ஆனால், மலிவு விலையில் ரேஷன் கடையில் வழங்கப்படும் தேங்காய் எண்ணை, மாநிலம் முழுவதுமுள்ள கடைகளில் விரைவில் விரிவுபடுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேங்காய் எண்ணெய் வழங்கிட வேண்டும், பாமாயில் கொள்முதல் அறிவிப்பை நிறுத்தி வைத்துவிட்டு தேங்காய் எண்ணெய் கொள்முதலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.. இதுகுறித்து உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து செய்தியாளர்களிடம் சொன்னது இதுதான்:
தேங்காய் எண்ணெய்: "தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகம் சமீபத்தில் 200 லட்சம் லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த புள்ளியை வெளியிட்டதாக தெரிய வருகிறது. இது தென்னை விவசாயிகளுக்கு வேதனை அளித்து வருகிறது.. நம் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான தென்னை விவசாயிகள் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டு கடனாளியாக இருக்கிறார்கள்.. கொப்பரைக்கும் உரிய விலை கிடைப்பதில்லை. அதனால், நீண்ட காலமாக ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறோம்.
சமீபத்தில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.. இந்த நிலையில், நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் இந்த பாமாயில் ஒப்பந்த புள்ளி அறிவிப்பு விவசாயிகளுக்கு அதிர்ச்சி அளிக்கிறது..

தென்னை விவசாயிகளை காப்பாற்றவும், உள்ளூர் வணிகத்தை ஊக்குவிக்கவும், தமிழ்நாடு அரசு பாமாயில் இறக்குமதி ஒப்பந்த புள்ளியை ரத்து செய்து, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தென்னை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் உரம், இடுபொருள்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும் " என்று தெரிவித்துள்ளர்..
பாமாயில் இருக்கா?: அந்தவகையில், விரைவில் தேங்காய் எண்ணெய் ரேஷனில் கிடைக்கும் என்றும், அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய்யா? அல்லது பாமாயிலுடன் தேங்காய் எண்ணெய்யா? என்பதுதான் இன்னமும் தெரியவில்லை..!
கேழ்வரகு: முன்னதாக, தமிழக அரசு முக்கிய திட்டம் ஒன்றை சில நாட்களுக்கு முன்பு நடைமுறைப்படுத்தி உள்ளது.. அதாவது, பொதுவிநியோக திட்டத்தின் கீழ் தமிழ்நாடு ரேஷன் கடைகளில் சர்க்கரை, பாமாயில், பருப்பு, அரிசி, கோதுமை போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. 2 வாரங்களுக்கு முன்புதான், ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. முதற்கட்டமாக நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.. இந்த திட்டத்தையும் தமிழகமெங்கும் அமலாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்து வரும்நிலையில், தேங்காய் எண்ணெய் விநியோகம் குறித்த கோரிக்கைகள் வலுவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் தரத்தை வெளிப்படுத்தும் பிரிவில், 3,753 கடைகளுக்கும், பாதுகாப்பு மேலாண்மை பிரிவில் 2,031 கடைகளுக்கும் சர்வதேச தரச்சான்று கிடைத்துள்ளது. இதனால் கூட்டுறவுத் துறை செயலர் ராதாகிருஷ்ணனிற்கு, ஏராளமான பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் இருக்கிறது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications